Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரிலையன்ஸ்-ன் நிகரலாபம் 4.4% உயர்வு

 ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் அதிகரித்து உள்ளது. 2015-16 ம் நிதி ஆண்டுக்கான முதலாம் காலாண்டில் நிகர லாபம் 4.4 % அதிகரித்து ரூ. 6,222 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் நிகர லாபம் ரூ. 5,957 கோடியாக இருந்தது .


இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையும் அதிகரித்து உள்ளது. 2014-15 ம் நிதி ஆண்டின் முதலாம் காலாண்டில் ரூ.56,043 கோடியாக இருந்த ஒட்டுமொத்த விற்பனை 38 % அதிகரித்து ரூ.77,130 கோடியாக உயர்ந்திருக்கிறது 


நிகர லாபம் அதிகரித்து இருந்தாலும் சந்தையின் தொடர் சரிவால் ரிலையன்ஸ் நிறுவனப் பங்கின் விலை தற்போதைய நிலையில் 1.97 % குறைந்து வர்த்தகமாகியது 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ