Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சொத்துகள் மூலமானம் வருமானம் ஈட்ட முடியுமா?

 பணி ஓய்வு பெற்ற நான், மாதம் ரூ.15,000 சம்பாதிக்கிறேன்.  எனக்கு ரூ.60 லட்சம் மதிப்பில் சொந்த வீடு உள்ளது.  என் பிபிஎஃப் கணக்கில் ரூ.8 லட்சம் இருக்கிறது. நான் வேலைக்குப் போகாமல், என் சொத்துக்களை வைத்து,  வருமானம் ஈட்ட முடியுமா? 

தங்கராஜ், கும்பகோணம்.
 
வெங்கடேஸ்வரன், நிதி ஆலோசகர்
‘‘உங்களால் முடிந்தவரை அந்தப் பகுதி நேர வேலையைத் தொடர்ந்து செய்யப்பாருங்கள். ஒருவேளை நீங்கள் நிரந்தரமாக ஓய்வுபெற முடிவெடுத்திருந்தால், வருங்கால வைப்பு நிதியில் (PF) ரூ.8 லட்சம் உங்கள் மாதாந்திர செலவுக்குக் கட்டுபடியாகாது. உங்களின் வீட்டை மற்றும் சொத்துக்களை ரிவர்ஸ் அடமானம் வைப்பதன் வழியாகக் கொஞ்சம் வருமானம் ஈட்ட முடியும்.
அதாவது, ஒவ்வொரு மாதமும்  ஒரு குறிப்பிட்ட தொகையை 10 முதல் 20 வருடங்களுக்கு வங்கி வழங்கும் அல்லது உங்கள் வாழ்க்கை முழுவதும் வழங்கும். நீங்கள் பெற்றுக் கொண்ட தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டாம்.
உங்களுக்குப் பின்னர் வங்கி உங்களின் சொத்துக்களை விற்று, அந்தத் தொகையை எடுத்துக் கொள்ளும். வாரிசுகள் விரும்பினால், அதுவரைக்கும் வழங்கப்பட்ட தொகையை வட்டியுடன் செலுத்தி வீட்டை மீட்டுக்கொள்ளலாம். இருந்த போதிலும் உங்களால் முடிந்தவரை தற்போது பார்த்துவரும் வேலையைத் தொடர்வதே நல்லது.’’
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ