Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாருதி சுசூகி-ன் நிகர லாபம் 56% உயர்வு

 இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான  மாருதி   சுசூகி-ன்  நிகர லாபம் அதிகரித்து உள்ளது. 2015-16 ம் நிதி ஆண்டுக்கான முதலாம் காலாண்டில் நிகர லாபம் 56% அதிகரித்து  ரூ.1,192 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் நிகர லாபம் ரூ.762 கோடியாக இருந்தது 

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனையும் அதிகரித்து உள்ளது. 2014-15 ம் நிதி ஆண்டின் முதலாம் காலாண்டில் ரூ.11,073 கோடியாக இருந்த நிகர விற்பனை 18% அதிகரித்து ரூ.13,078 கோடியாக உயர்ந்துள்ளது. 

 
நிகர லாபம் அதிகரித்து இருப்பதால் மாருதி சுசூகி நிறுவனப் பங்கின் விலை தற்போதைய நிலையில் 0.50 சதவிகிதம் அதிகரித்து விற்பனையாகி வருகிறது 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP