Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் பொதுத்துறை வங்கிகள்

 இறக்கத்தில் பொதுத்துறை வங்கிகள்

பொதுத்துறை நிறுவன வங்கிகளின் பங்குகள் 52 வார இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. ஏப்ரல் - ஜூன் காலாண்டு முடிவுகள் தான் இந்த இறக்கத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
 
பேங்க் ஆஃப் இந்தியா, அலஹாபாத் பேங்க், கனரா பேங்க், தேனா பேங்க், ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், சின்டிகேட் பேங்க், யூகோ பேங்க் விஜயா பேங்க் போன்ற வங்கிகளின் பங்குகள் என்.எஸ்.இ யில் தங்களுடைய 52 வார இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது.
 
காலை 11.00 மணியளவில் மற்ற துறைகளை காட்டிலும் கூடுதல் இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. சி.என்.எக்ஸ் பிஎஸ்யூ பேங்க் துறை இந்த 2015ல் மட்டும் 26% இறக்கம் கண்டிருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.
 
தற்போது வரை 10 பொதுத்துறை வங்கிகள் 2016 நிதி ஆண்டிற்கான தங்கள் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. இந்த வங்கிகள் கடந்த வருடத்தை காட்டிலும் 40% நிகர லாபம் குறைந்து 2,596 கோடி ரூபாயாக இருக்கிறது. 2015 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இதே 10 வங்கிகளின் நிகர லாபம் 4,346 கோடி ரூபாயாக இருந்தது.  இந்த நிகர லாபம் சரிவுக்கு வாராக் கடன்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ