Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ட்விட்டர் கேள்வி-பதில் !

 இன்று நாணயம் விகடன்  ட்விட்டர்  கேள்வி-பதில் பகுதியில்  பங்கு முதலீட்டில் லாபத்தை புக் செய்வது தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளித்தார் பங்குச் சந்தை நிபுணர் எஸ்.லெட்சுமணராமன்  (ஆர்எம்ஆர் ஷேர்ஸ், சென்னை).

பங்கு முதலீட்டில் லாபத்தை புக் செய்வது தொடர்பான  சந்தேகங்களுக்கு உங்களது ட்விட்டர் கணக்கிலிருந்து @nanayamvikatan உங்கள் கேள்வியை #AskNV என்று ட்விட் செய்து பதில் பெறுங்கள் என அறிவித்திருந்தோம். அதன்படி வந்த கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இங்கே உங்களுக்காக...
 
 
 
 
1. பிராஃபிட் புக்கிங் செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன?
 
பதில் : பங்குகளில் முதலீடு செய்வது எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேபோன்று விற்பனை செய்து ஆதாயம் எடுத்துக்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்காக வாங்கிய பங்கினை சிறிய அளவு லாபத்துடன் விற்க வேண்டும் என்று கட்டாயமில்லை.
 
முதலில் நீங்கள் எந்த வகையான முதலீட்டாளர் என்பதை தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். அதாவது, உங்கள் முதலீடுகள் குறுகிய / நீண்ட காலமா என்பதை நீங்கள் தெளிவாக தீர்மானித்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வகையான முதலீட்டுக்கும் வெவ்வேறு வகையான உத்திகள் கையாளப்படுகின்றன. 
 
முதலில் நீண்ட கால முதலீடுகளைப் பார்ப்போம் : 
பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்போது மூன்று முக்கியமான விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
அ. நம்முடைய முதலீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
ஆ. நஷ்டம் ஏற்பட்டால் குறைந்த அளவு நஷ்டத்துடன் முதலீட்டை விற்று வெளியேறத் தெரிந்திருக்க வேண்டும்.
இ. லாபங்களை வளரவிட வேண்டும், அதேசமயம் வளர்ந்த லாபங்களை தக்க வைத்துக்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். அதாவது, சந்தையின் போக்கில் (Uptrend to down trend) நிறுவனம் சார்ந்து ஏதாவது எதிர்மறையான தகவல்கள், அதன் காரணமாக பங்கின் விலையில் சரிவு ஏற்படும் என்று கணித்தோமேயானால் பிராஃபிட் புக் செய்யலாம்.
 
எப்போது விற்க வேண்டும் :
 
நாம் பங்குகளில் முதலீடு செய்யும்போது ஒட்டுமொத்த சந்தையின் போக்கு, முதலீடு செய்யும் நிறுவனம் எந்த துறையைச் சார்ந்ததோ அந்தத் துறையின் எதிர்கால வளர்ச்சி, துறை சார்ந்த அரசின் கொள்கைகள், அந்த நிறுவனத்தின் நிதி சார்ந்த செயல்பாடுகள், மேலாண்மைக் குழுவின் திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை, எதிர்காலத்தில் அந்த நிறுவனம் எந்த அளவுக்கு வளர்ச்சி பெறும் என்பது போன்ற விஷயங்களை ஆராய்ந்து முதலீடுகளை மேற்கொள்ளலாம்.
மேற்கூறியவைகளில் ஏதேனும் ஒன்றில் மாற்றம் வந்தாலும், அந்தப் பங்குகளின் விலை சரியக்கூடும். அப்போது விழிப்போடு இருந்து முன்கூட்டியே குறைந்த அளவு நஷ்டத்தோடு வெளியேறுவது நல்லது.
 
பொதுவாக பங்குகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். 
* பொருளாதாரம் சார்ந்த பங்குகள். உதாரணமாக உலோகங்கள், சிமென்ட், வங்கி, மூலதன பொருட்கள்.
 
* பொருளாதாரம் சாராத பங்குகள் மற்ற துறை சார்ந்தவைகள். உதாரணமாக பார்மா, எஃப்.எம்.சி.ஜி, கன்ஸ்யூமர் கூட்ஸ்.
பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்தாலோ (GDP) பணவீக்க விகிதம், வட்டி விகிதம் அதிகரித்தாலோ, கனரக வாகனங்களின் விற்பனை குறைந்தாலோ பொருளாதாரத்தில் ஒரு மந்தநிலை நிலவுகிறது என்று பொருள். எனவே பொருளாதாரம் சார்ந்த பங்குகளை மேற்கூறிய மாற்றங்கள் வரும்போது விற்று வெளியேறுவது நல்லது. 
 
பொதுவாக சந்தைகள் நன்றாக உயர்ந்தபின் சந்தையின் போக்கில் மாற்றம் வரும் அறிகுறிகள் தென்படும்போது பிராஃபிட் புக்கிங் செய்துகொள்வது நல்லது. மாற்றங்களை அறிந்துகொள்ள கீழ்க்கண்ட எளிய உத்திகளைப் பின்பற்றலாம் :
* சந்தையின் குறியீடுகள் உயரும்போது 52 வார அதிகபட்ச விலையைத் தொடும் பங்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும். ஒரு காலகட்டத்தில் குறியீடுகள் மட்டும் உயர்ந்து பங்குகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துவிடும். 
* வார அளவில் பார்க்கும்போது சந்தை குறியீட்டின் ஆரம்பநிலைக்கும், முடிவு நிலைக்கும் பெரிய வித்தியாசம் இல்லாமல் முடியும்.
*. சந்தையின் குறியீட்டுக்கும் அதனுடைய 200 நாள் மூவிங் ஆவரேஜுக்கும் இடையேயான வித்தியாசம் 70 சதவிகிதத்திற்கும் மேல் அதிகரித்தால் சந்தையில் கரெக்‌ஷன் வர வாய்ப்பு இருக்கிறது. 
* தனிப்பட்ட நிறுவனங்களைப் பொறுத்தவரைக்கும், அதனுடைய தற்போதைய பி.இ விகிதத்திற்கும் கடந்த 5 அல்லது 10 ஆண்டுகளின் சராசரியைவிட அதிகமாக இருந்தாலும் கரெக்‌ஷன் வர வாய்ப்பு இருக்கிறது.
குறுகிய கால முதலீட்டாளர்கள் :
 
குறுகிய கால முதலீட்டாளர்கள் பிராஃபிட் புக் செய்ய கையாள வேண்டிய உத்திகள் :
* குறுகிய கால அடிப்படையில் வர்த்தகம் செய்யும்போது ஸ்டாப் லாஸ் மிக முக்கியம்.
* . நம்முடைய அன்றாட வாழ்க்கையைப் பாதிக்காமல், நம்மால் எந்த அளவுக்கு நஷ்டத்தைத் தாங்க முடியுமோ அந்த அளவுக்குதான் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
*  டெக்னிக்கல் அனாலிசிஸ் தெரிந்துகொள்வது நல்லது.
*  முதலீடு செய்தபின் ஒரு குறிப்பிட்ட லாப வரம்பினை ( 5 - 10 சதவிகிதம்) நிர்ணயித்துக் கொண்டு அந்த இலக்கை அடைந்த உடன் விற்றுவிட்டு வேறு ஒரு பங்கினை வாங்கலாம்.
*  டெக்னிக்கல் அனாலிசிஸ் தெரிந்திருந்தால் சப்போர்ட், ரெசிஸ்டன்ஸ் லெவலை அறிந்து கொண்டு சப்போர்ட் லெவலில் வாங்கி ரெசிஸ்டன்ஸ் லெவலில் விற்று பிராஃபிட் புக் செய்யலாம். 
*   நாம் வாங்கிய பங்கின் விலை ஏற ஏற ஸ்டாப் லாஸ் லெவலையும் கட்டாயமாக உயர்த்த வேண்டும்.

2. பங்கு முதலீட்டில் லாப சதவிகிதத்தை எப்படி கணக்கிடுவது ?
 
பதில் :ஒவ்வொரு முதலீட்டாளரும் தீர்மானிக்க வேண்டிய விஷயம். முதலில் நீங்கள் எந்த வகையான முதலீட்டாளர் என்பதைத் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். குறுகிய கால அடிப்படை என்றால் எந்த அளவுக்கு லாபம் வந்தால் உங்களுக்கு திருப்தி ஏற்படுமோ அதை இலக்காகக் கொண்டு செயல்படலாம். 
நீண்ட கால முதலீட்டாளர் என்றால் இலக்கு அவசியமில்லை. நீண்ட கால அடிப்படையில் நம்முடைய முதலீடுகள் சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்களிலோ அல்லது பொருளாதாரப் போக்கினை உணர்ந்து முதலீடு செய்தாலோ சந்தை அபரிமிதமான லாபத்தைதான் கொடுத்திருக்கிறது.
இதன் அடிப்படையில் உங்கள் முதலீடுகளை நீங்கள் மேற்கொள்ளலாம்.
 
3. அதிகபட்சம் எத்தனை சதவிகிதம் வரை லாபம் பார்க்க இலக்கு நிர்ணயிக்கலாம்?
 
பதில் : சந்தையைப் பொறுத்தவரைக்கும் நீண்ட கால அடிப்படையிலான முதலீடுகள் அபரிமிதமான லாபத்தைக் கொடுத்திருக்கிறது. முதலீட்டுக்கான வெற்றி என்று பார்த்தால் ஸ்டேயிங் கெப்பாசிட்டி என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவது, ஒரு தீர்மானத்துடன் நீண்டகால அடிப்படையில் முதலீடுகளை மேற்கொள்ளும்போது இந்த அபரிமிதமான லாபத்தை நீங்கள் பெறலாம்.
 
4. லாபத்தை புக் செய்த பிறகு பங்கு விலை ஏறிக்கொண்டிருக்கிறது. காளை சந்தைக்கும் கரடி சந்தைக்கும் இலக்குகளை மாற்றிக்கொள்ள வேண்டுமா?
 
பதில் : பொதுவாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் சொல்லக்கூடியது "வாங்கிய பின் விலைகள் இறங்கிவிட்டன, விற்ற பின் ஏறிவிட்டன" 
 
இதை எப்படி தவிர்க்கலாம் என்றால், பங்குகளைத் தேர்ந்தெடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று என்ன விலை கொடுத்து வாங்குகிறோம் என்பதும் முக்கியம். ஒவ்வொரு பங்குக்கும் ஓர் உள்ளார்ந்த மதிப்பு (Intrinsic value) உள்ளது. நாம் கொடுக்கும் விலை உள்ளார்ந்த மதிப்பைவிட குறைவாக இருந்தால் நஷ்டத்தைத் தவிர்க்கலாம். சந்தை விலை உள்ளார்ந்த மதிப்பைவிட அதிகமாக இருந்தால் லாபத்தை பதிவு செய்யலாம்.
 
உள்ளார்ந்த மதிப்பைக் கணக்கிடுவது என்பது சற்று கடினமான காரியம்தான். எளிமையான உத்தி என்பது பி.இ விகிதத்தை வைத்துக்கொண்டு நாம் வாங்கும் மற்றும் விற்கும் விலையைத் தீர்மானிக்கலாம்.
 
5. லாபத்தை புக் செய்ய வேண்டிய நேரத்தில் திடீரென சந்தை சரிந்தால் என்ன செய்வது? பங்குகள் எவ்வளவு சதவிகிதம் குறையும்போது மீண்டும் வாங்கலாம்?
 
பதில் : பொதுவாக சந்தைகள் போக்கை மாற்றிக்கொள்ளும்போது நமக்கு முன்கூட்டியே சில அறிகுறிகளைக் காட்டும். மாற்றங்களை அறிந்துகொள்ள கீழ்க்கண்ட எளிய உத்திகளைப் பின்பற்றலாம் :
* சந்தையின் குறியீடுகள் உயரும்போது 52 வார அதிகபட்ச விலையைத் தொடும் பங்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும். ஒரு காலகட்டத்தில் குறியீடுகள் மட்டும் உயர்ந்து பங்குகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துவிடும். 
* வார அளவில் பார்க்கும்போது சந்தை குறியீட்டின் ஆரம்பநிலைக்கும், முடிவு நிலைக்கும் பெரிய வித்தியாசம் இல்லாமல் முடியும்.
 
* சந்தையின் குறியீட்டுக்கும் அதனுடைய 200 நாள் மூவிங் ஆவரேஜுக்கும் இடையேயான வித்தியாசம் 70 சதவிகிதத்திற்கும் மேல் அதிகரித்தால் சந்தையில் கரெக்‌ஷன் வர வாய்ப்பு இருக்கிறது. 
 
* தனிப்பட்ட நிறுவனங்களைப் பொறுத்தவரைக்கும், அதனுடைய தற்போதைய பி.இ விகிதத்திற்கும் கடந்த 5 அல்லது 10 ஆண்டுகளின் சராசரியைவிட அதிகமாக இருந்தாலும் கரெக்‌ஷன் வர வாய்ப்பு இருக்கிறது.
 
வெகு அபூர்வமாக எந்த அறிகுறிகளும் இல்லாமல் சந்தைகள் சரியலாம். நாம் தரமான பங்குகளில் முதலீடு செய்திருந்தால், சந்தை மீட்சிக்கு வரும்போது இந்தப் பங்குகள் முன்னோடியாகச் செயல்படும். எனவே, பங்குகளை தேர்வு செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
 
புல் மார்க்கெட் என்றால் கரெக்‌ஷனில் பங்குகளின் விலைகள் 20% வரை குறைய வாய்ப்பிருக்கிறது. 20% வரை குறைந்து பங்குகளின் விலை நிலை பெற்றால், அந்தப் பங்குகளை வாங்கலாம். குறைவு என்பது 20% மேல் இருந்தால் யோசிக்க வேண்டும். சந்தை புல் மார்க்கெட்டிலிருந்து பியர் மார்க்கெட்டுக்கு செல்கிறது என்று அர்த்தம்.
 
6. குறுகிய கால முதலீடுகளுக்கு லாபத்தை புக் செய்யும்போது என்னென்ன யுக்திகளை கையாள வேண்டும்? லாப சதவிகித அளவுகோல் என்னவாக இருக்க வேண்டும்? 
 
பதில் : குறுகிய கால முதலீட்டாளர்கள் பிராஃபிட் புக் செய்ய கையாள வேண்டிய உத்திகள் :
* குறுகிய கால அடிப்படையில் வர்த்தகம் செய்யும்போது ஸ்டாப் லாஸ் மிக முக்கியம்.
*. நம்முடைய அன்றாட வாழ்க்கையைப் பாதிக்காமல், நம்மால் எந்த அளவுக்கு நஷ்டத்தைத் தாங்க முடியுமோ அந்த அளவுக்குதான் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
*. டெக்னிக்கல் அனாலிசிஸ் தெரிந்துகொள்வது நல்லது.
* முதலீடு செய்தபின் ஒரு குறிப்பிட்ட லாப வரம்பினை ( 5 - 10 சதவிகிதம்) நிர்ணயித்துக்கொண்டு அந்த இலக்கை அடைந்த உடன் விற்றுவிட்டு வேறு ஒரு பங்கினை வாங்கலாம்.
*. டெக்னிக்கல் அனாலிசிஸ் தெரிந்திருந்தால் சப்போர்ட், ரெசிஸ்டன்ஸ் லெவலை அறிந்துகொண்டு சப்போர்ட் லெவலில் வாங்கி ரெசிஸ்டன்ஸ் லெவலில் விற்று பிராஃபிட் புக் செய்யலாம். 
*. நாம் வாங்கிய பங்கின் விலை ஏற ஏற ஸ்டாப் லாஸ் லெவலையும் கட்டாயமாக உயர்த்த வேண்டும். 
லாப சதவிகிதம் உங்கள் வர்த்தக திறனை பொறுத்து அமையும்.
 
7. பங்கு விலை குறைய குறைய சராசரி செய்துகொண்டு வந்தால், அதிகமாக லாபம் சம்பாதிக்கலாம் என்கிறாள் என் தோழி. இது சரியா?
 
இந்த உத்தி எல்லா பங்குகளுக்கும் பொருந்தாது. மிக தரமான பங்குகளுக்கு மட்டும் இந்த உத்தி பொருந்தும்.
 
8. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை பங்குச் சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்திக்கிறது. உதாரணமாக 1992 - 1993-களில், 2000, 2008 என்ற சீரான இடைவெளிகளில் இந்திய சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. அப்படிப் பார்த்தால் 2016-ல் அடுத்த வீழ்ச்சி வரும். இந்த வீழ்ச்சிகளைத் தாண்டி பிராஃபிட் புக் செய்ய முடியும் என்று எந்த துறையையாவது குறிப்பிட முடியுமா?
 
ஒவ்வொரு முறையும் சந்தையில் அபரிமிதமாக உயர்ந்தபோது, உயர்வுக்கு காரணமாக ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த பங்குகளை சொல்லலாம். 1992ல் பொருளாதாரம் சார்ந்த சிமென்ட் மற்றும் சில துறைகள் அதிகம் ஏற்றம் கண்டன. 2000-ல் குறிப்பாக மென்பொருள் துறை அதிக ஏற்றமடைந்தது. 2008ல் நிதி நிறுவன பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன. 
எனவே, சந்தைகள் விழும்போது இந்தத் துறை சார்ந்த பங்குகள் அதிக விலை சரிவை சந்தித்தன. இதுபோல் 2016 எந்த துறை அபரிமிதமாக ஏறும் என்பதை இப்போதே கணிக்க இயலாது.
 
9. இந்திய சந்தைகளில் ஷார்ட் டேர்ம், மீடியம் டேர்ம், லாங் டேர்ம், வெரி லாங் டேர்ம் ஆகியவைகளில் எதில் அதிக பிராஃபிட் புக் செய்ய முடியும்?
 
பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரை லாங் டேர்ம் மற்றும் வெரி லாங் டேர்ம் முதலீடுகள் நல்ல லாபத்தைக் கொடுத்திருக்கின்றன.
 
10. இந்திய சந்தைகள் கடந்த சில மாதங்களாக அதிக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகிறது. இந்த ஏற்ற இறக்கத்தை எப்படி சமாளித்து பிராஃபிட் புக் செய்வது?
 
பங்குச் சந்தையைப் பொறுத்தவரைக்கும் ஏற்ற இறக்கம் என்பது தவிர்க்க இயலாத விஷயம். இதற்காகத்தான் வாங்கும்போது எஸ்ஐபி முறையில் பங்குகளை வாங்கச் சொல்கிறோம். 
இந்த ஏற்ற இறக்கங்களை சமாளிக்க கீழ்க்காணும் வழிகளை மேற்கொள்ளலாம்.
 
* முதலீடு செய்த பங்குகளின் விலை 100% உயர்ந்துவிட்டால் செய்த முதலீட்டில் 50% விற்று முதலீட்டை முதலில் திரும்ப எடுத்துக்கொள்ளலாம். பாக்கி உள்ள 50% பங்குகளும் லாபமே.
*. எஸ்ஐபி முறையில் பங்குகளில் முதலீடு செய்வதைபோல,  எஸ்.பி.பி (Systematic profit booking) முறையில் ஒவ்வொரு ஏற்றத்திலும் குறிப்பிட்ட அளவு பங்குகளை விற்று லாபத்தை பதிவு செய்யலாம்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ