Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாபர்-ன் நிகர லாபம் 24 % அதிகரிப்பு

 இந்தியாவின் மிகப்பெரிய ஆயுர்வேதிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான டாபர்-ன் நிகர லாபம் உயர்ந்திருக்கிறது. 2015-16 ம் நிதி ஆண்டுக்கான முதலாம் காலாண்டில் நிகர லாபம் 24 % அதிகரித்து ரூ. 262 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் நிகர லாபம் ரூ.211 கோடியாக இருந்தது .


இந்த நிறுவனத்தின் நிகர விற்பனையும் அதிகரித்துள்ளது. 2014-15 ம் நிதி ஆண்டின் முதலாம் காலாண்டில் ரூ.1,864 கோடியாக இருந்த நிகர விற்பனை இப்போது 11% அதிகரித்து ரூ. 2,064 கோடியாக உயர்ந்துள்ளது 


நிகர லாபம் அதிகரித்து இருப்பதால் டாபர் நிறுவனப் பங்கின் விலை தற்போதைய நிலையில் 1.53 சதவிகிதம் அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ