Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யெஸ் பேங்க்-ன் நிகரலாபம் 27.7% உயர்வு

 தனியார் துறை வங்கியான யெஸ் பேங்க் -ன்  நிகர லாபம் உயர்ந்திருக்கிறது. 2015-16 ம் நிதி ஆண்டுக்கான முதலாம் காலாண்டில் நிகர லாபம் 27.7 % அதிகரித்து ரூ.551 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் நிகர லாபம் ரூ.431 கோடியாக இருந்தது. 
இந்த பேங்க்-ன்  மொத்த வாராக் கடன் உயர்ந்திருக்கிறது. 2014-15 ம் நிதி ஆண்டின் முதலாம் காலாண்டில் 0.33 சதவிகிதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 0.46 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. 2014-15 ம் நிதி ஆண்டின் முதலாம் காலாண்டில் 0.07 சதவிகிதமாக இருந்த நிகர வாராக்கடன் இப்போது 0.13 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது 
நிகர லாபம் அதிகரித்து இருப்பதால் யெஸ் பேங்க்-ன்  நிறுவனப் பங்கின் விலை தற்போதைய நிலையில் 0.77 அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP