Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ. 2000 கோடிக்கு ஷேர்கான் நிறுவனத்தை வாங்கியது, பிஎன்பி பரிபாஸ்

 

ஷேர்கான் நிறுவனத்தை ரூ. 2000 கோடிக்கு வாங்கியது பிஎன்பி பரிபாஸ்

சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான பிஎன்பி பரிபாஸ், பங்கு தரகு நிறுவனமான ஷேர்கான் -ன்  ஒட்டு மொத்த பங்குகளையும் வாங்கி இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு ரூ. 2000 கோடி வரை தரப்படலாம் என்று தெரிகிறது. 
 
ஷேர்கான் பங்கு தரகு நிறுவனமானது பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு சேவை செய்து வருகிறது. இந்த நிறுவனத்துக்கு  ஐரோப்பாவில் மட்டும் 17 லட்சம் முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள். 
 
இந்தியாவில் ஷேர்கானின் பங்களிப்பு 7% இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஷேர்கான் மூலம்  இந்தியாவில் 12 லட்சம் பேர் பங்குகளில் முதலீடு செய்துள்ளார்கள்.
 
இது குறித்து, பிஎன்பி பரிபாஸ் இந்திய பிரிவின் தலைமை நிர்வாகி ஜோரிஸ் டியர்க்ஸ் கூறுகையில், ஷேர்கான் நிறுவனத்தை வாங்குவதன் மூலம் இந்தியாவில் எங்கள் நிறுவனம் இன்னும் வளர்ச்சிகாணும் என தெரிவித்துள்ளார்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ