Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆன்லைன் வர்த்தகத்தில் இந்தியா சீனாவை முந்தும் வாய்ப்பு: ஸ்னாப்டீல்

 ஆன்லைனில் பொருட்களை வாங்கவும் விற்கவும் செய்வோரின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை மேலும் உறுதிபடுத்தும் வகையில் ஸ்னாப்டீல் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி குனால் பாஹ்ல், விரைவில் சீனாவை விட ஆன்லைன் வர்த்தகத்தில் இந்தியா முன்னிலை வகிக்கும் என்ற தகவலை தெரிவித்துள்ளார். 

 
கடந்த சில ஆண்டுகளில் இந்தியா அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டிருக்கும் போதிலும் ஆன்லைன் வர்த்தகம் இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயேதான் இருந்துகொண்டிருக்கிறது. 
 
ஆனால் உலகில் பிற நாடுகளைவிட அதிகமாக, இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம் தொடர்ந்து குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்து வருவதாகவும், அடுத்த பத்தாண்டுகளில் எட்டு மடங்கு அதிகரித்து இப்போது முன்னிலையில் இருக்கும் சீனாவை முந்தும் என அவர் தெரிவித்துள்ளார். 
 
ஹாங்காங்கில் நடந்த கன்வெர்ஜ் தொழில்நுட்ப மாநாட்டில் சிஎன்பிசியிடம் அவர் கூறியதாவது: "இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி இன்று 2 டிரில்லியன்  டாலர், அதில் 70 சதவிகிதம் நுகர்வோர் துறையை சேர்ந்தது. இன்னும் பத்தாண்டுகளில் உற்பத்தி 2.5 டிரில்லியன்  டாலராக உயர்ந்தால் அதில் 10 சதவீதம் ஆன்லைன் வர்த்தகம் மூலம் விற்பனையாகலாம் என்று நம்பலாம்." என்று கூறினார். 
 
மேலும் இன்று 20-30 பில்லியன் டாலர் அளவில் விற்பனையாகும் ஆன்லைன் வர்த்தகம் 250 பில்லியன் டாலராக அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ