Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கத்தில் முதலீடு ஜூன் காலாண்டில் குறைவு!

இந்த ஆண்டு ஏப்ரல் - ஜுன் மாத காலத்தில் சர்வதேச அளவில் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தங்கத்தின்   தேவை சரிவடைந்துள்ளது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

2015 ஜுன் காலாண்டில் சர்வதேச அளவில் தங்க நாணயங்கள் மற்றும் பதக்கங்களுக்கான தேவைபாடு12% குறைந்துள்ளது. அதேபோல, சில்லறை முதலீட்டாளர்கள் தங்கதில் முதலீடு செய்வது ஜுன் காலாண்டில் 25% குறைந்துள்ளது.
 
அமெரிக்க டாலரின்  மதிப்பு அதிகரித்து வருவது, சீனா முதலீட்டாளர்கள் தங்கத்தை தவிர்த்து பங்குகளில் அதிக முதலீடு செய்வது உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலையும் கடந்த சில நாட்களாக குறைந்துவருவது குறிப்பிடதக்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ