Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீடு விற்பனை, மூலதன ஆதாய வரி

 எனக்கு சென்னையை அடுத்த தாம்பரத்தில் ஒரு வீடு இருக்கிறது. அந்த வீட்டை விற்று கிண்டியில் ஒரு வீடு வாங்கலாம் என்று இருக்கிறேன். நான் மூலதன ஆதாய வரி கட்ட வேண்டுமா?

ராம், தாம்பரம்.
கே.ஆர். சத்தியநாராயணன், ஆடிட்டர், ஜி.வி.என். சங்கர் அண்ட் கோ.
‘‘நீங்கள் தாம்பரத்திலிருக்கும் வீட்டை விற்று, கிண்டியில் வீடு வாங்கும்போது மூலதன ஆதாய வரி கட்ட வேண்டியதில்லை. ஆனால், சில விதிமுறைகளை அனுசரிக்க வேண்டும். தாம்பரத்தில் இருக்கும் வீட்டை வாங்கிய மூன்று வருடங்களுக்குள் அதை விற்க நேரிட்டால், அதற்கு குறுகிய மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு, ஜூலை 30, 2012-ல் வீட்டை வாங்கி, ஜூலை 14, 2015-க்குள் விற்று இருந்தால், குறுகிய கால மூலதன ஆதாயம், வருமானத்துடன் சேர்க்கப்பட்டு, அதற்கு வரி செலுத்த வேண்டும். அப்படி இல்லாமல், தாம்பரத்தில் வாங்கப்பட்ட வீடு மூன்று வருடங்களுக்குமேல் ஆகியிருந்தால், அதை விற்று வரும் தொகையைக் கொண்டு நீங்கள் கிண்டியில் வீடு வாங்கும்போது, உங்கள் பெயரில் இன்னொரு வீடு சொந்தமாக இருந்தாலும் வரிச் சலுகை கிடைக்கும். ஒருவேளை நீங்கள் புதிதாக வாங்கப்போகும் வீட்டையும் சேர்த்து இரண்டு வீட்டுக்குமேல் உங்களுக்குச் சொந்த வீடு இருந்தால், நீங்கள் வீட்டை விற்ற மொத்த தொகைக்கும் மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும்.’’
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ