Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

28 வயதில் எந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

 நான் கத்தாரில் வேலை செய்யும்   எனக்கு இப்போது வயது 28. எனக்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்ட்  மற்றும் பென்ஷன் திட்டங்களைக் குறிப்பிடவும்.

அழகப்பன், கத்தார்.
எஸ்.பாரதிதாசன், நிதி ஆலோசகர்.
‘‘உங்களுக்கு 28 வயதுதான் ஆகிறது. இந்த வயதிலேயே ஓய்வுக்கால முதலீடுகளைப் பற்றி  சிந்திக்கத் தொடங்கி இருப்பது சரியான விஷயமே. நீங்கள் 60 வயதில் ஓய்வு பெறப் போகிறீர்கள் என்றும், அப்போது சராசரியாக ஆண்டு பணவீக்கம் 7 சதவிகிதமாக இருக்கும் என வைத்துக் கொள்வோம். இதைக் கருத்தில் கொண்டே உங்களின் 80 வயது வரைக்குமான தேவைகளை பூர்த்தி செய்கிற மாதிரி முதலீட்டைத் தீர்மானிக்க வேண்டும்
ஈக்விட்டி ஃபண்டுகளில்  நீண்ட காலத்துக்கு முதலீடு செய்வதே உங்களின் ஓய்வுக்காலத்தை வளமாக மாற்ற போதுமானதாக இருக்கும். உங்களின் இன்றைய மாத செலவு ரூ.30,000 என தோராயமாக எடுத்துக் கொண்டால், 7% பணவீக்க விகிதத்தில் உங்களுக்கு 60 வயதில் ரூ.2.61 லட்சம் மாத செலவு இருக்கும். 80 வயது வரை வாழ்வீர்கள் என்கிற கணிப்பில் ரூ.5.72 கோடி தொகுப்பு நிதி வேண்டும். ஆண்டுக்கு 15% வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி ஃபண்டுகளில் மாதம் ரூ.6,120 வீதம் 32 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வந்தால் போதும்.”

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close