Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை!

 

முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் விட்டிருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி. 

 

இந்த காலாண்டுக்கான நிதிக் கொள்கை தொடர்பான ரிசர்வ் வங்கியின் கூட்டம் இன்று மும்பை நடந்தது. இந்தக் கூட்டத்தில் முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் 0.25 சதவிகிதம் என்கிற அளவுக்காவாவது குறைப்பார் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக இருந்துவந்தது. 
ஆனால், தற்போதுள்ள கடன் விகிதத்தில் எந்த மாற்றத்தையும் செய்யாமலே விட்டிருக்கிறார் ரிசர்வ் வங்கியின் கவர்னர். தற்போது  சிஆர்ஆர் 4 சதவிகிமாகவும், ரெப்போ ரேட் 7.25 சதவிகிதமாகவும் இருக்கிறது. இதில் எந்த மாற்றமும் இன்று செய்யப்படவில்லை.
சில்லறைப் பணவீக்கம் கடந்த ஒன்பது மாதங்களாக தொடர்ந்து அதிகமாகவே (5.4%) என்கிற அளவிலேயே இருந்து வருகிறது. அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால், இந்த பணவீக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புண்டு. எனவே, இப்போது வட்டி விகிதத்தைக் குறைப்பது சரியான முடிவாக இருக்காது என்று ரிசர்வ் வங்கி நினைக்கிறது. இதன் காரணமாகவே வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்கிறார்கள் நிதித் துறை வல்லுநர்கள்.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்குமுன் 108 புள்ளிகள் சரிந்திருந்த சென்செக்ஸ், அறிவிப்புக்குப்பின் சற்று உயர்ந்து வர்த்தகமானது. தற்போது சென்செக்ஸ் 28153 (-33) புள்ளிகளாக வர்த்தகமாகிறது! 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ