Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீல்கமல் நிகர லாபம் 360% உயர்வு

வீட்டுக்கு தேவையான ஃபர்னிச்சர், மெத்தை மற்றும் தலையனை போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் நீல்கமல் நிறுவனத்தின் 2015 - 16 நிதி ஆண்டின் ஜூன் காலாண்டின் நிகர லாபம் 360% அதிகரித்து 25.3 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 5.5 கோடி ரூபாயாக இருந்தது.

நீல்கமல் நிறுவனத்தின் நிகர விற்பனை 2014 -15ஆம் ஆண்டைவிட 10% அதிகரித்திருக்கிறது. 2014 - 15ன் முதல் காலாண்டில்  415 கோடி ரூபாயாக இருந்த  நிகர விற்பனை, நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 455 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.
 
இன்று காலை 976 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கிய நீல்கமல் நிறுவன பங்குகள் தற்போது 1009 ரூபாய் என்கிற புதிய உச்சத்தை தொட்டு வர்த்தகமாகி வருகிறது. காலை10.00 மணி வரை மட்டும் 3.5 லட்சம் பங்குகள் பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ யில் வர்த்தகமாகி இருக்கின்றன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ