Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரிட்டானியா நிகர லாபம் 67% உயர்வு

 பிஸ்கெட் உற்பத்தியில் பிரபலமான பிரிட்டானியா நிறுவனத்தின் நிகர லாபம் 2015-16 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 66.86% உயர்ந்து 189.66 கோடி ரூபாயாக உள்ளது. முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் அதன் நிகரலாபம் 113.66 கோடி ரூபாயாக இருந்தது. 


பிரிட்டானியா நிறுவனத்தின் நிகர விற்பனை கடந்த 2014-2015 ஆண்டை காட்டிலும் 12.97% அதிகரித்துள்ளது. கடந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 1,772.63 கோடி ரூபாயாக இருந்த அதன் நிகர விற்பனை, இந்த நிதியாண்டில் 2,002.51 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 


நுகர்வு பொருட்களின் விற்பனை மந்தமாக இருந்த போதிலும் விற்பனையில் பிரிட்டானியா வளர்ச்சி கண்டு வந்திருப்பதாக அதன் நிர்வாக இயக்குனர் வரூண் பேரி தெரிவித்துள்ளார். 


நேற்று வர்த்தக முடிவில் 3,177.40 ரூபாய்க்கு வர்த்தகமாகியிருந்த பிரிட்டானிய நிறுவன பங்குகள், இன்று 3194.95 ரூபாய் என்கிற அளவில் 0.56% ஏற்றத்திலேயே வர்த்தகமாகி வருகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ