Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ட்விட்டர் கேள்வி-பதில் !

 இன்று ( 05.08.2015) நாணயம் விகடன்  ட்விட்டர்  கேள்வி-பதில் பகுதியில் ஏற்றுமதி தொழில் சம்பந்தமான  சந்தேகங்களுக்கு  பதில் அளித்தார் உன்னி கிருஷ்ணன், (இணை துணை பொது இயக்குநர், ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் எக்ஸ்போர்ட் ஆர்கனைசேஷன் )

 
ஏற்றுமதி தொழில் சம்பந்தமான உங்கள்   சந்தேகங்களுக்கு உங்களது ட்விட்டர் கணக்கிலிருந்து @nanayamvikatan உங்கள் கேள்வியை #AskNV என்று ட்விட் செய்து பதில் பெறுங்கள் என அறிவித்திருந்தோம். அதன்படி வந்த கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இங்கே உங்களுக்காக...
 

1. ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள்  என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது?
 
ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால், முதலில் IEC (Import Export code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்திடம் (Directorate General of Foreign Trade) பெறலாம். இதற்கான அலுவலகம் சென்னை, மதுரை மற்றும் கோவை ஆகிய மூன்று இடங்களில் ஏற்றுமதியாளர்களின் வசதிக்காக இயங்கி வருகிறது. 
 
IEC எண்ணை பெறுவதற்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான இணையதளம் http://dgft.gov.in/. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்போது, இதற்கான செலவு ரூ.500 மட்டுமே. ஆனால், நேரடியாக விண்ணப்பிக்கும்போது செலவு அதிகமாக இருக்கும். முன்பு போல் அல்லாமல், IEC எண்ணை வழங்குவதற்கு வெளிநாட்டு வர்த்தக அலுவலகம் அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. ஆன்லைனில் விண்ணப்பித்த ஏழு நாட்களில் இந்த IEC  எண்ணை வழங்கிவிடும். 
 
2. ஏற்றுமதிக்கான ஆர்டர்களை எப்படி பெறுவது? 
 
தற்போதைய நிலையில் மத்திய அரசின் அமைப்பான FIEO மற்றும் இதர ஏற்றுமதி புரமோஷனல் கவுன்சில்கள் வெளிநாடுகளில் வர்த்தக பொருட்காட்சிகளை நடத்தி வருகின்றன. இந்தப் பொருட்காட்சிகளில் ஏற்றுமதியாளர்கள் கலந்துகொள்வதன் மூலம், அங்கிருக்கும் இறக்குமதியாளர்களை நேரடியாகச் சந்திக்க முடியும், நேரடியாகச் சந்திப்பதுடன் மட்டுமல்லாமல், தங்களின் ஏற்றுமதி பொருட்கள் குறித்த விவரங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி ஆர்டர்களை பெற முயற்சிக்கலாம். இப்படி நேரடியாக இறக்குமதியாளர்களை தொடர்பு கொண்டு பேசும்போது அவர்களுக்கு தங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த வகை பொருட்காட்சிகளில் கலந்துகொள்ள FIEO மற்றும் ஏற்றுமதி புரமோஷனல் கவுன்சில்களை அணுகலாம்.  
 
இரண்டாவது வழிமுறை, இணையதளம் மூலம் மார்க்கெட்டிங் மேற்கொள்வது. ஏற்றுமதி தொழில் ஆரம்பிப்பவர்கள் முதலில் தங்கள் நிறுவனத்தின் பெயரில் வலைதளம் ஒன்றை உருவாக்கி, அதனுள் தாங்கள் ஏற்றுமதி செய்ய இருக்கும் பொருட்கள் பற்றிய விவரங்கள் மற்றும் புகைப்படங்களை வைத்திருப்பது அவசியம். இந்த வலைதளங்களை இறக்குமதியாளர்கள் பார்க்கும்போது தங்களின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரிக்கும். அதேபோல இன்றைய இணையதள பிசினஸ் டு பிசினஸ் வலைதளங்கள் அதிகம் இருக்கின்றன. அந்த வலைதளங்களில் சென்று ஏற்றுமதியாளர்கள் தங்களை முன்னிருத்தும்போது அங்கு வரும் இறக்குமதியாளர்களுடனான உறவுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக கைவினைப் பொருட்கள், பட்டுச் சேலைகள் மற்றும் தஞ்சாவூர் பெயின்டிங்ஸ் போன்ற பல பொருட்களுக்கு பிசினஸ் டு கஸ்டமர் வலைதளங்கள் உதவிகரமாக இருக்கும். இந்த வலைதளங்கள் வாயிலாக அதிகமாக லாபம் சம்பாதிக்க முடியும் என்பது கூடுதல் தகவல்.
 
தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இன்றைய நிலையில், Search Engine Optimization (SEO) என்கிற விஷயமும் மார்க்கெட்டிங் உத்திகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த உத்திகளை பயன்படுத்தியும் ஏற்றுமதியாளர்கள் தங்களின் நிறுவனங்களை (வலைதளங்களை) முன்நிறுத்திக் கொள்வதன் மூலம் ஏற்றுமதி ஆர்டர்களை எளிதாக பெறலாம். அதேபோல ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் மார்க்கெட்டிங் செய்வதன் மூலமும் ஏற்றுமதி ஆர்டர்களை பெற முடியும். 
 
3. இறக்குமதியாளர்களுடனான உறவுமுறை எப்படி இருக்க வேண்டும்? 
 
ஏற்றுமதித் தொழில் செய்பவர்கள், தங்களின் இறக்குமதியாளர்களுடன் நல்ல உறவு முறைகளை பலப்படுத்திக்கொள்வது அவசியம். அதேசமயம் ஆர்டர்களை அவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பதற்காக, ஏற்றுமதி செய்யும் பொருட்கள் மீதான உத்தரவாதத்தை மிகைப்படுத்தி எடுத்து சொல்லக் கூடாது. தாங்கள் ஏற்றுமதி செய்யும் பொருளானது தரமானதாகவும், இறக்குமதியாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகவும் இருக்கும்பட்சத்தில் அவர்களுடனான உறவுமுறை தொடர்ந்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல அவர்களின் தேவை என்ன என்பதைத் தெளிவாகக் கேட்டு தெரிந்து வைத்துக்கொண்டு ஏற்றுமதி செய்யும்போது தவறுகள் ஏற்பட வாய்ப்பிருக்காது. தவறுகள் ஏற்படாமல் இருக்கும்போது ஏற்றுமதியாளர் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு இடையேயான உறவுமுறையும் சிறப்பாகவே இருக்கும். 
 
4. ஏற்றுமதி செய்ய வங்கியில் கடன் பெற முடியுமா. எதன் அடிப்படையில் கடன் தருவார்கள்; எவ்வளவு?
 
ஏற்றுமதித் தொழில் மீதான கடன்களை வழங்குவதில் அனைத்து வங்கிகளும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. தற்போதைய நிலையில் இதர கடன்களுக்கான வட்டி விகிதத்தைவிட 1-2% வட்டியானது குறைவாகவே ஏற்றுமதி தொழில் கடனுக்கு வசூலிக்கப்படுகிறது. ஏற்றுமதியாளர்கள் தங்களிடம் இருக்கும் IEC எண்ணை வைத்து மட்டுமே வங்கியை கடன் கேட்டு அணுக முடியாது. ஏற்றுமதிக்கான ஆர்டர்களை இறக்குமதியாளர்களிடமிருந்து பெற்றிருக்கும்பட்சத்தில், அந்த ஆர்டர் ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்து கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். கொள்முதல் செய்ய இருக்கும் பொருளின் மதிப்பில் 80% வரைக்கும் மட்டுமே வங்கியில் கடன் பெற முடியும். மீதி இருக்கும் 20% தொகையை ஏற்றுமதியாளர்களே முதலீடு செய்ய வேண்டும். இதற்கான நடைமுறைகள் வங்கிக்கு வங்கி மாறுபடும். ஏற்றுமதியில் அனுபவமுள்ள, முன்னதாக பல ஏற்றுமதிகளை மேற்கொண்ட ஏற்றுமதியாளர்கள் வங்கியை கடன் கேட்டு அணுகும்போது அவர்கள் தங்களின் வருடாந்திர வருமான ஆவணங்களை சமர்ப்பித்து, அதன் அளவில் 300% வரையில் கடன் பெறலாம்.  
 
5. எந்த மாதிரியான பொருட்களை ஏற்றுமதி செய்யலாம்? ஏற்றுமதி செய்யக்கூடாத பொருட்கள் என்னென்ன?
 
உயிருள்ள உயிரினங்கள், பாதிப்பை ஏற்படுத்தும் ரசாயனப் பொருட்கள், ஆயுதங்கள், சந்தன கட்டைகள் போன்ற பல பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை செய்யப்பட்டிருக்கின்றன. கட்டுப்பாட்டுக்குள் வரும் பொருட்களான, காட்டன் போன்ற சில பொருட்களையும் ஏற்றுமதி செய்ய முடியாது. ஆனால், இந்த வகை பொருட்களை ஏற்றுமதி செய்ய சில அரசு அமைப்புகளுக்கு மட்டுமே உரிமம் கொடுக்கப்படிருப்பதால், அவர்களிடமிருந்து உரிமம் பெற்று ஏற்றுமதி செய்யலாம். மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அல்லாமல் மற்ற அனைத்து பொருட்களையும் ஏற்றுமதி செய்யலாம். அதே சமயம் அவ்வப்போது அரசாங்கம் தடை செய்யும் பொருட்களையும் ஏற்றுமதி செய்ய முடியாது.
மேலும், இதுகுறித்த விவரங்களுக்கு http://indiantradeportal.in/ என்கிற   வலைதளத்தை பார்க்கவும். 
 
6. ஏற்றுமதி தொழிலில் பண பரிவர்த்தனை எப்படி மேற்கொள்ள வேண்டும்? கவனிக்க வேண்டிய விஷயங்கள்?
 
இன்றைய நிலையில் ஏற்றுமதி ஆர்டர்களை பெறும் ஆர்வத்தில், முழுக்க முழுக்க கடன் வர்த்தகத்தை மேற்கொண்டு சில ஏற்றுமதியாளர்கள் ஏமாற்றத்தை சந்தித்து வருகிறார்கள். இது முற்றிலும் தவறான நடைமுறையாகும். இறக்குமதியாளர்களிடமிருந்து 25% பணத்தை முன்னதாக வாங்கிக் கொண்டு, மீதி 75% பணத்தை Latter of credit  (LC) முறையின் மூலம் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். அதேபோல, இறக்குமதியாளர்களில் சிலர், ஏற்றுமதி ஆவணங்களை நேரடியாக அனுப்பும்படி கேட்பார்கள். இந்த நடைமுறையையும் தவிர்த்துவிடுவது நல்லது. வங்கிகள் மூலம் மட்டுமே அனைத்து ஆவண பரிமாற்றங்களையும் மேற்கொள்வது உத்தமம். அதே போல ஆர்டர் ஆவணங்களையும் முழுவதுமாக சரிபார்ப்பது அவசியம். 
 
7. உண்மையான, நம்பகத் தன்மையான இறக்குமதியாளர்களை இனம் கண்டு கொள்வது எப்படி?
 
ஏற்றுமதி ஆர்டர் கிடைத்தவுடன், Export Credit Guarantee Corporation of India Limited என்கிற அரசு அமைப்பிடம் ஏற்றுமதியாளர்கள் முதலில் அணுக வேண்டும். இவர்களிடம் இந்தியாவிலிருந்து இறக்குமதி மேற்கொண்ட அனைத்து நாட்டின் இறக்குமதியாளர்கள் விவரங்கள் இருக்கும். 
 
ஆர்டர் கொடுத்த இறக்குமதியாளர்கள் குறித்த நம்பக் தன்மையை இவர்களிடமிருந்து தெரிந்துக் கொள்ளலாம். இவர்கள் இறக்குமதியாளர்கள் மீது நம்பகத்தன்மையை உறுதி செய்தால் மட்டுமே வர்த்தகத்தை மேற்கொள்ளலாம்.  
 
8.  எக்ஸ்போர்ட் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ளாம் என்கிறார்களே, எதற்கு இன்ஷூரன்ஸ்? இதனால் நமக்கு கிடைக்கும் பாதுகாப்பு?
 
இன்ஷூரன்ஸ் இரண்டு வகைகளில் எடுத்துக் கொள்ளலாம். ஒன்று Marine Insurance. மற்றொன்று ECGC insurance. நாம் அனுப்பும் பொருட்கள் இறக்குமதியாளர்களை சென்று சேர்வதற்கு முன்னதாக பாதிப்புக்குள்ளானால் அதற்காக எடுத்துக் கொள்ளும் இன்ஷூரன்ஸ்தான் Marine Insurance. இதனால் ஏற்படும் இழப்புக்கு இந்த வகை இன்ஷூரன்ஸ் மூலம் இழப்பீடு கிடைக்கும். 
 
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ