Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காக்னிசன்ட் நிகர லாபம் 12.9% உயர்வு

 ஐடி துறை முன்னணி நிறுவனங்களில் ஒன்றான காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் (சிடிஎஸ்) நிறுவனத்தின் நிகர லாபம் 2015-16 ம்  நிதி ஆண்டின் ஜூன் காலாண்டில் 12.9% அதிகரித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த இந்த நிறுவனத்தில் மொத்தம் 2,17,700 பேர் வேலை செய்கின்றனர். ஐடி துறையில் மகத்தான வளர்ச்சியைக் கண்டுவரும் இந்த நிறுவனத்தின் வருமானம் இந்த  நிதி  ஆண்டின் ஜூன் காலாண்டில் 22.6% அதிகரித்து 19,687 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 

வட அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் சிடிஎஸ் நிறுவனத்தின் சுகாதாரம் மற்றும் நிதித் துறைகளில் அதிகளவில் செலவு செய்ததுதான் காரணமாக சொல்லப்படுகிறது. 

இதன் மூலம் சிடிஎஸ்-ன் நிகர லாபம் இந்த நிதி ஆண்டின் ஜூன் காலாண்டில் எதிர்பார்த்தை விட 12.9% அதிகரித்து 2675.61 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 

ஃபோர்ப்ஸ் இதழின் முன்னணி 500 நிறுவனங்கள் பட்டியலில் 2010ல் 498ம் இடத்தில் இருந்த டிசிஎஸ் இப்போது 281 இடத்தில் உள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ