Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாஃபாய் நிறுவனத்தின் கீழ் சியல் ஹெச்ஆர் நிறுவனம் தொடக்கம்

இந்தியாவின் முன்னனி கார்ப்பரேட் துறை நிர்வாகிகளில் ஒருவரான கே.பாண்டியராஜன் மாஃபாய் நிறுவனத்தின் கீழ், சியல் (CIEL) ஹெச் ஆர் சர்வீசஸ் என்கிற பெயரில் ஒரு மனித வள மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவி உள்ளார்.

இந்த நிறுவனம் பெங்களுரூவை தலைமையிடமாக கொண்டு இயங்க இருக்கிறது. இந்திய நிறுவனங்களுக்குத் தேவையான மனித வளத்தை நிரந்தரமாகவும், சரியாகவும், தேவையான நேரத்தில், நிறுவனம் குறிப்பிடும் திறமையுள்ளவர்களை தேர்ந்தெடுத்து வழங்கும். இந்த நிறுவனம் ஐ.டி துறையினருக்கான பணியாளர்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறி இருக்கிறது.
 
கே.பாண்டியராஜன் சியல் நிறுவனத்தின் சேர்மேனாகவும், பாண்டியராஜனின் மனைவி லதா ராஜன் சியல் நிறுவனத்தின் துணை-நிறுவனர் மற்றும் இயக்குநராகவும், ஆதித்யா நாராயணன் மிஸ்ரா முதன்மை செயல் அதிகாரியாகவும், சந்தோஷ் நாயர் சியல் நிறுவனத்தின் முதன்மை ஒருங்கிணைப்பு அதிகாரி மற்றும் இயக்குநராக பொறுப்பு வகிக்க உள்ளனர். 
 
கே.பாண்டிய ராஜன் இதற்கு முன் மாஃபாய் நிறுவனத்தின் சேமேன் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ