Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்கு வர்த்தகத்தில் இன்று முதல் பிராவிடன்ட் ஃபண்ட் முதலீடு

 


பணியாளர்கள் வைப்பு நிதி (எம்ப்ளாயிஸ் பிராவிடன்ட் ஃபண்டு) நிறுவனம் இன்று முதல் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளது.

பணியாளர்கள் துறை அமைச்சர் பண்டாரு தட்டாத்ரேயா இன்று காலை 11 மணியளவில் மும்பையில் பங்கு வர்த்தக முதலீட்டை தொடங்கி வைக்கிறார். 2015-16 நிதி ஆண்டில் மொத்தம் 6000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்வதற்கான முடிவு இன்று எடுக்கப்படும் என்று பணியாளர்கள் வைப்பு நிதி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த முதலீடு எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்யப்படுகிறது. 

8 கோடி சந்தாதாரர்களைக் கொண்டுள்ள பணியாளர்கள் வைப்பு நிதி நிறுவனத்தின் மொத்த சேமிப்பு தொகை 6 லட்சம் கோடி ரூபாய். எனவே அதன் முதலீடு லாபத்தில் அமைந்தால் மேலும் அதிகளவில் முதலீடு செய்யும்  என்று எதிர்பார்க்கலாம். இதனால் அதன் சந்தாதாரர்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ