Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாருதி எஸ்-கிராஸ் கார் அறிமுகம், ஆரம்ப விலை ரூ. 8.34 லட்சம்

 முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி புதிய மாருதி எஸ்-கிராஸ் காரை நேற்று டெல்லியில் அறிமுகம் செய்துள்ளது. 

 

குறைந்த விலையில்  கார்களை உருவாக்கும் நிறுவனம் மாருதி சுசூகி. இதனால் மாருதி கார்களை அதிகம் பேர் விரும்புகின்றனர். இதன் மூலமே மாருதி கார்கள், விற்பனையில் ஒவ்வொரு வருடமும் 20% அதிகரித்து வந்துள்ளது. 

அதனை மேலும் அதிகரிக்க இப்போது மற்றொரு புதிய காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாருதி எஸ் கிராஸ் காரின் விலை 8.34 லட்சத்திலிருந்து ஆரம்பமாகிறது. மொத்தம் 600 கோடி ரூபாயை இந்தக் கார் உற்பத்தியில் மாருதி முதலீடு செய்துள்ளது. ஏற்கனவே இந்தக் காரை 6000 பேர் புக்கிங் செய்துவிட்டனர். 35,000 கார் குறித்த விவரங்களைப் பெற்றுள்ளனர். 

கடந்த 2014 ஆண்டு ஜூலையில் 1.01 லட்சம் கார்கள் விற்பனை செய்திருந்த மாருதி, இந்த ஆண்டு 2015 ஜூலை முடிவில் 1.22 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இப்போது இந்தப் புதிய கார் அறிமுகத்தின் மூலம் மேலும் விற்பனை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ