Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமேசான், ஃப்ளிப் கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி

ஆன்லைன் வர்த்தகத்தில் வருமானம் பார்க்கும் வாய்ப்புகள் அதிகரித்திருப்பதால் அமேசான், ஃப்ளிப் கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்களிடையே கடுமையான போட்டி உருவாகியுள்ளது.


செல்போனும்,இன்டர்நெட் சேவையும் எல்லா இடங்களுக்கும் பரவி வரும் நிலையில், சில்லறை வர்த்தகங்கள் கூட இணையத்தின் வழியேதான் நடக்கிறது. பெரும்பாலான மக்கள் வாங்கவும் விற்கவும் ஆன்லைனை நாடி வருவதால் ஆன்லைன் வர்த்தகத்தில் வருமானம் பார்க்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. 
இதனால் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களிடையே கடும் போட்டி உருவாகியுள்ளது. இந்தத் துறையில் முன்னணியில் உள்ள அமேசான், ஃப்ளிப் கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் நிறுவனங்கள் அந்தப் போட்டியில் தீவிரமாக இறங்கியுள்ளன.


இதற்காக, ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களைத் தங்களின் விளம்பரங்களுக்குப் பயன்படுத்திக்கொள்வதிலும் விற்பனை உரிமங்களைப் பெறுவதிலும் போட்டி போடுகின்றன. 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ