Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுரங்க அனுமதி மறுக்கப்பட்டதால் அதானி குழும பங்கின் விலை 2.89% குறைந்தது

 அதானி குழுமத்தின் 1.02 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரி சுரங்கத்திற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. இதனால் இன்றைய வர்த்தகத்தில் அதானி குழும பங்குகள் 2.89% குறைந்து 95.90 ரூபாயாக வர்த்தகமாகிறது.


இந்திய அதானி நிறுவனக் குழுமம் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் கடற் பகுதியில் 'கார்மிக்கேல்' என்ற மிகப்பெரிய நிலக்கரி சுரங்கத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. அதன் முதலீட்டு தொகை 1.02 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதற்காக ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திடம் அனுமதி வாங்கிவிட்டிருந்தது. 


இந்நிலையில் அந்த நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டால் அப்பகுதியில் உள்ள அரியவகை யக்கா ஸ்கிங்க் என்ற பல்லி மற்றும் ஆர்னமெண்டல் ஸ்நேக் என்ற பாம்பு வகை உயிரினங்கள் அழியும் அபாயம் இருப்பதாகச் சொல்லி அதற்கு எதிராக ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இதனையடுத்து அதானியின் நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அளித்த அனுமதி ரத்து செய்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டது. 


ஏற்கனவே எந்த வங்கியும் இந்த அதானி திட்டத்தில் முதலீடு செய்ய தயாராக இல்லை. எனவே அதானியின் இந்தச் சுரங்க திட்டமே  கேள்விக்குறியாகியுள்ளது. 


இந்த செய்தியினால் இன்று காலை 98 ரூபாயாக தொடங்கிய அதானி குழுமத்தின் பங்குகள் விற்பனை 2.89% குறைந்து 95.90 ரூபாய்க்கு வர்த்தமாகி வருகிறது. இது மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP