Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருப்பதி தேவஸ்தானம் பெயரில் டீமேட் கணக்கு தொடக்கம்

 

 உலகிலேயே பெரிய பணக்கார கடவுளான திருப்பதி வெங்கடாஜலபதி எழுந்தருளியிருக்கும் திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரில் டீமேட் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இனி பக்தர்கள் தங்கள் பங்குகளை அதில் காணிக்கையாக செலுத்தலாம்.


திருப்பதி தேவஸ்தானத்தில் ஏழுமலையானை தரிசிக்க ஒரு நாளைக்கு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்கள் குவிகின்றனர். இதுவரை பக்தர்கள் ரொக்கமாகவும், தங்கம் வெள்ளியாகவும் தங்கள் காணிக்கைகளைச் செலுத்தி வந்தனர். சமீப காலமாக பக்தர்கள் பலர் தாங்கள் வைத்துள்ள பங்குகளையும் காணிக்கையாக உண்டியலில் செலுத்தி வந்தனர்.

இதுவரை உண்டியலில் கிடைத்த பங்குகளின் மதிப்பே பல லட்சம் ரூபாய் வரை இருப்பதால் அதனை நிர்வகிக்க முறையான ஒரு டீமேட் கணக்கு திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.

அதன் எண் 1601010000384828. 


இந்தக் கணக்கில் பக்தர்கள் தங்கள் பங்குகளைக் காணிக்கையாகச் செலுத்தலாம். அதோடு உலகின் எந்த மூலையிலிருந்தும், டீமேட் கணக்கு உள்ள பக்தர்கள், சந்தை பரிவர்த்தனை மூலமாகவே திருப்பதி வெங்கடாஜலபதிக்கு காணிக்கையாக தங்கள் பங்குகளை தேவஸ்தான டீமேட் கணக்கில் மாற்றித்தரலாம். 


இதன் மூலம் திருப்பதி தேவஸ்தானத்தின் வருமானம் கணிசமாக உயரும் என்றும், உலகம் முழுவதுமிருந்தும் பங்குகள் காணிக்கையாக குவியும் என்றும் எதிர்பார்க்கலாம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ