Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

4ஜி இன்டர்நெட் சேவையை துவக்கிய ஏர்டெல்!


பார்தி ஏர்டெல் நிறுவனம் 4ஜி இன்டர்நெட் சேவையை இந்தியாவில் உள்ள 296 நகரங்களில் துவக்கி உள்ளது. தற்போது இந்தச் சேவை சோதனை அடிப்படையில் குறிப்பிட்ட நகரங்களில் இந்தச் சேவை வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சேவை குறித்த கருத்துகள் பொதுமக்களிடம் இருந்து வரவேற்கப்படுகிறது. மேலும் இந்த 4ஜி சேவை ஸ்மார்ட் போன், வைஃபை, டேட்டா கார்டு என அனைத்திலும் இந்தச் சேவை கிடைக்கும். 25 ரூபாய் முதல் டேட்டா பேக் கிடைக்கும். 


சோதனை முறையில் வழங்கப்படும் இந்தச் சேவையில் மக்களிடம் இருந்து கிடைக்கும் கருத்துகளின் மூலமாகச் சேவையை மேம்படுத்த முடியும். அதிவேக 4ஜி சேவையை இந்தியாவில் முதல் முறையாக ஏர்டெல் வழங்குகிறது எனப் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் எம்டி மற்றும் சி இ ஒ கோபால் விட்டல் தெரிவித்துள்ளார். 
மேலும் ஏற்கனவே இருக்கும் மொபைல் எண்ணை மாற்றிக் கொள்ளமாலே இந்த சேவையை பெற முடியும். 


இந்தியாவில் 4ஜி இன்டர்நெட் சேவையை வழங்குவதற்கு அனுமதி பெற்று ரிலையன்ஸ் வருகிற டிசம்பர் மாதத்தில் துவங்க தயாராகி வருகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ