Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாக்டர் ரெட்டிஸ், ஆம்ஜென் அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம்

 முன்னணி மருந்து விற்பனை நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் லெபாரட்டரிஸ், அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனமான ஆம்ஜென் இங்க் நிறுவனத்துடன் இணைந்து ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. 


இந்த ஒப்பந்தத்தின் படி, டாக்டர் ரெட்டிஸ், ஆம்ஜென் நிறுவனத்தின் புற்றுநோய் மற்றும் இருதய நோய் சம்பந்தப்பட்ட கிப்ரோலிஸ் (புற்று நோய் எதிர்ப்பு மருந்து), பிளின்சிடோ மற்றும் ரெப்பதா ஆகிய மூன்று மருந்துகளையும் இந்தியாவில் சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது. 


இந்தியாவில் புற்று நோய் மற்றும் இருதய நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு சேவை அளித்து வருவதில் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு நல்ல அனுபவம் உள்ளதால் ஆம்ஜென் நிறுவனம் அதனுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வந்துள்ளதாக, அதன் ஜப்பான், ஆசிய பசிபிக் பிரிவின் துணைத் தலைவர், பென்னி வான் கூறியுள்ளார். 


இந்நிலையில் இந்தப் புதிய மருந்துகளை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்துவதன் மூலம் டாக்டர் ரெட்டிஸின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இன்று காலை பங்கு வர்த்தகத்தில் 4210 ரூபாயாக வர்த்தகமாக தொடங்கிய டாக்டர் ரெட்டிஸின் பங்குகளின் விலை 1.76 % உயர்ந்து 4268.90 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP