Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வு நிதி: செபி தலைவர் ஆதங்கம்

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் விழிப்பு உணர்வு நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதாக செபி தலைவர் யூ.கே.சின்ஹா ஆதங்கம் தெரிவித்துள்ளார். 
இந்தியாவில் பெரும்பாலானோர் ரிஸ்க் குறைவு என்பதால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் முதலீடு செய்யவே ஆர்வம் காட்டி வருகின்றனர்.  மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தங்கள் முதலீட்டாளர்களின் விழிப்பு உணர்வுக்காக குறிப்பிட்ட நிதியை ஒதுக்க வேண்டும் என்று செபி உத்தரவிட்டுள்ளது


ஆனால், சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அந்த நிதியைப் பெரும்பாலும் முதலீட்டாளர்களின் விழிப்பு உணர்வு கூட்டங்களுக்காகப் பயன்படுத்தாமல் தங்கள் சொந்தத் தொழிலை வளர்ப்பதற்கான விநியோகஸ்தர்கள் கூட்டங்களுக்காக முறை கேடாகப் பயன்படுத்துவதாக செபி தலைவர் யூ.கே.சின்ஹா தெரிவித்துள்ளார்.


இதனால் மியூச்சுவல் நிறுவனங்கள் தங்கள் முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வு கூட்டங்களின் விவரங்களை செபிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் முதலீட்டு சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் விழிப்பு உணர்வு கூட்டங்களைக் கண்காணிக்கவும் முடிவு செய்துள்ளது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ