Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பி.ஹெச்.இ.எல் பங்கின் விலை 8% குறைந்தது

 அரசின் கீழ் இயங்கும் மின் உற்பத்தி நிறுவனமான பி.ஹெச்.இ.எல்-இன் பங்குகள் இன்று 8% விலை குறைந்து வர்த்தகமானது. ஜூன் காலாண்டில் அதன் நிகர லாபம் 83% தீடீரென்று சரிந்ததே இதற்கு காரணம். 


இன்று பங்குச் சந்தையில் பி.ஹெச்இ.எல் பங்குகள் 283.70 ரூபாயாக வர்த்தகமாக தொடங்கியது. மதியம் 2.05 மணியளவில் அதன் பங்கின் விலை 8% வரை குறைந்து 259.80 ரூபாயாக வர்த்தகமாகியது. கடந்த இரு வாரக் காலத்தில் இந்த நிறுவனப் பங்கின் மீதான சராசரி தினசரி வர்த்தக அளவு  2.6 லட்சம் ஆக இருந்த நிலையில் இன்று மட்டும் 10.5 லட்சம் பங்குகள் கைமாறி இருக்கிறது.  


இதன் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமானது பங்குச் சந்தை குறியீடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மும்பை பங்கு சந்தை மின் துறை வர்த்தகம் 1.4 % குறைந்து 2,064.60 வர்த்தகமாகியது. இதனால் சென்செக்ஸ் 0.2% குறைந்து 28,232.44 புள்ளிகளாக உள்ளது. 


பங்கு சந்தையில் பி.ஹெச்.இ.எல்-இன் பங்குகள் குறைந்து வர்த்தகமானதற்கு காரணம், 2014-15 நிதி ஆண்டின் ஜூன் காலாண்டில் அதன் நிகர லாபம் 194 கோடி ரூபாயாக இருந்தது, இந்த நிதி ஆண்டின் ஜூன் காலாண்டு நிகர லாபம் அதிகபட்சமாக 83% சரிந்து 33.9 கோடி ரூபாயாக குறைந்ததுதான். 


கடந்த நிதி ஆண்டின் ஜூன் காலாண்டில் அதன் மொத்த வருமானம் 5,068 கோடியாக இருந்தது, இந்த நிதி ஆண்டின் அதே காலாண்டில் அதன் மொத்த வருமானம் 4,280.80 கோடியாக குறைந்துள்ளது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP