Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வோடஃபோன் இரட்டிப்பு டேட்டா ஆஃபர்

 முன்னணி அலைபேசி சேவை நிறுவனமான வோடஃபோன், ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இரு மடங்கு இணைய சேவையை வழங்க முடிவு செய்துள்ளது. 


வோடஃபோன் இணைப்பை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும், இணையம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை 2ஜி-யிலிருந்து 3ஜி-க்கு மாற்றவும் 3ஜி இன்டர்நெட் பேக்குகளில் இரட்டிப்பு இணைய சேவையைப் பயன்படுத்திக்கொள்ளும் சலுகையை அறிவித்துள்ளது. 


இந்தச் சேவை இப்போது முதலில் மும்பையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. பின்னர் மற்ற பெருநகரங்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 


2015-16 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய மொத்த வருமானத்தில் 17% வோடஃபோன் இணைய சேவையின் மூலம் கிடைத்த வருமானத்தின் பங்கு என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் 4ஜியை அறிமுகப்படுத்தவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close