Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கல்விக் கடனை கட்டாவிட்டால் என்ன பாதிப்பு வரும்?

நான் வங்கி ஒன்றில் கல்விக் கடன் வாங்கியிருந்தேன். என்னால் கடனை தொடர்ந்து செலுத்த முடியவில்லை. வங்கி என் மீது என்ன நடவடிக்கை எடுக்கும்?
செல்வம், திருவாரூர்.
ஆர்.கணேசன், உதவிப் பொது மேலாளர் (ஓய்வு), பஞ்சாப் நேஷனல் பேங்க்.
‘‘கல்விக் கடனைச் செலுத்தாமல் இடையில் நிறுத்திவிட்டால் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை வங்கிகள் எடுக்க வாய்ப்பிருக்கிறது. கடன் வாங்கியவர் வேலை செய்து கொண்டிருந்தால் வேலை செய்யும் நிறுவனத்துக்கு கடனைச் செலுத்தச் சொல்லி வங்கி நோட்டீஸ் அனுப்பும். வேலையில் இல்லை என்றால், கடன் வாங்கியவரின் பெற்றோரை கடனைக் கட்டச் சொல்லும். அப்படியும் கடனைக் கட்டவில்லை என்றால், கடனுக்கு ஜாமீன் கையெழுத்துப் போட்ட நபரை கடனைச் செலுத்தச் சொல்லி வங்கி வலியுறுத்தும்.
அப்போதும் கடன் கட்டப்பட வில்லை என்றால், பெற்றோர் மற்றும் ஜாமீன் அளித்த நபர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்வதுகூட நடக்கும். அப்படியும் எதுவும் நடக்கவில்லை என்கிறபட்சத்தில் செய்தித்தாள்களில், கடன் வாங்கியவரின் புகைப்படத்துடன் கடன் செலுத்த வேண்டிய தகவலை விளம்பரமாக அறிவிக்கும்.
இந்த நடவடிக்கைகளுக்கு உள்ளாவதைவிட, வாங்கிய கல்விக் கடனைச் செலுத்திவிடுவதே சரி. இதனால் உங்கள் கிரெடிட் ரேட்டிங் உயரும். எதிர்காலத்தில் புதிய கடன் வாங்கச் செல்லும் காலத்தில் உங்களுக்கு உடனடியாகக் கடன் கிடைக்க வாய்ப்பு உருவாகும்."
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close