Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீடு விற்பனை முலதான ஆதாய வரி எவ்வளவு!

ஒரு வீட்டை விற்கும் போது எவ்வளவு தொகைக்கு மேல் போனால் மூலதன ஆதாய வரி (capital gain tax) கட்ட வேண்டும்? அதற்கு வரிவிலக்குப் பெற என்னவிதமான பாண்டுகளில் முதலீடு செய்யலாம்?
கே.சீனிவாசன், தர்மபுரி.
என்.பி.இசை அழகன், ஆடிட்டர்.
‘நீண்ட கால மூலதன சொத்தை விற்கும்போது உச்சவரம்பின்றி மொத்த ஆதாயத்தின் மீது 20% வரி செலுத்த வேண்டும். மாறாக, வருமான வரிச் சட்டம் பிரிவு 54EC-ன் கீழ் நேஷனல் ஹைவே அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (NHAI) அல்லது ரூரல் எலெக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் (REC) நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களில் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை முதலீடு செய்து, மூலதன ஆதாய வரி செலுத்தாமல் விலக்குப் பெறலாம்.
மேலும், குடியுரிமை பெற்ற தனிநபர், தனக்கு மூலதன ஆதாயம் தவிர வேறொன்றும் வருமானம் இல்லையெனில், வருமான வரி உச்சவரம்பு வரை வரிவிலக்குப் பெற முடியும்.
இருப்பினும், அந்த முதலீட்டின் மூலம் பெறப்படும் வட்டிக்கு வருமான வரி உச்சவரம்பைத் தாண்டும்போது வரி செலுத்த வேண்டும். மாறாக, குறுகிய கால மூலதன சொத்தாக இருப்பின் எந்தவித வரிவிலக்கும் பெற முடியாது.’’
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ