Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சொத்து தானம் செய்ய என்ன வழிமுறை!

 நான் எனது சுயச்சம்பாத்தி யத்தில் வாங்கிய 10 ஏக்கர் நிலத்தில், எனது நண்பருக்கு 5 ஏக்கர் நிலத்தைத் தானமாகக் கொடுக்க நினைக்கிறேன். தானமாக எழுதிக் கொடுப்பதற்கு என்ன ஆவணங்கள் வேண்டும்? எனக்கு மனைவி மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களிடமும் கையெழுத்துப் பெற வேண்டுமா?

ஏ.சதீஷ், செஞ்சி.
டி.பார்த்தசாரதி, சொத்து மதிப்பீட்டாளர், டி.பார்த்தசாரதி அசோசியேட்ஸ், சென்னை.
‘‘ஒருவர் சுயச்சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தினை எவருக்கு வேண்டுமானாலும் விற்கலாம், செட்டில்மென்ட் செய்யலாம், தானமாகக் கொடுக்கலாம், உயில் எழுதிவைக்கலாம். எல்லா உரிமையும் அவருக்கு மட்டுமே. யாரிடமும் கையெழுத்துப் பெற வேண்டிய அவசியம் இல்லை.
ஒருவர் உறவினர் அல்லாதவருக்கு தன் சொத்தினைத் தானமாகக் கொடுக்கலாம். ஆனால், அதற்குச் சொத்தின் அரசு மதிப்பீட்டில் 7% முத்திரைத்தாள் கட்டணம், 1% பத்திரப்பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.’’
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close