Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாடா மோட்டார்ஸின் நிகர லாபம் 49% குறைந்தது

 


இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸின் நிகர லாபம் 49% குறைந்து 2,769 கோடி ரூபாயாக உள்ளது. இதற்கு காரணம் சீனாவில் ஜாக்குவார் மற்றும் லேண்ட் ரோவர் கார்கள் குறைவாக விற்பனையானதுதான்.

2015-16 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் டாடா மோட்டார்ஸின் மொத்த வருமானம் 64,362 கோடி ரூபாய் வரலாம் என ப்ளூம்பர்க் கணித்தது. ஆனால் எதிர்பார்த்ததை 6% குறைந்து 61,020 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனையானது. இதனால் அதன் நிகர லாபம் 49% குறைந்து 2,769 கோடி ரூபாயாக உள்ளது. 

இதற்கு காரணம் டாடா மோட்டார்ஸின் முக்கிய கூட்டு நிறுவனமான ஜேஎல்ஆர் வாகனங்களின் விற்பனை குறைந்ததுதான். ஆனாலும் இந்நிறுவனம் 4% வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஏனெனில் அதன் விற்பனையான 1,46,721 பயணிகள் வாகனங்கள், மொத்த விற்பனை ஓரளவுக்கு உயர உதவியுள்ளன. 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ