Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கூகுள் சி.இ.ஓ-வாக தமிழர் சுந்தர் பிச்சை நியமனம்

 உலகின் முன்னணி தேடுதல் இயந்திரமான கூகுள் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ-வாக தமிழர் சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.


இதுவரை கூகுள் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியாக இருந்த லாரி பேஜ், ஆல்ஃபபெட் நிறுவனத்தின் செயல்பாடுகளையும், முதலீடுகளையும் நிர்வகிக்கும் பொறுப்பை கவனிக்க இருப்பதால், தமிழரான சுந்தர் பிச்சையை கூகுள் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் செய்தியை அதிகார பூர்வமாக தெரிவித்த லாரி பேஜ், "இதுவரை கூகுள் இணையதள ப்ராடக்ட்ஸ் மற்றும் எஞ்சினியரிங் பிசினசுக்கு பொறுப்பு வகித்த சுந்தர் பிச்சையின் அர்ப்பணிப்பும் திறமையும் பாராட்டப்பட வேண்டியது. தொழில்நுட்பத்தில் பேரறிஞரான இவர் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக பொறுப்பேற்க முழு தகுதியானவர்." என்று தெரிவித்தார்.

43 வயதான சுந்தர் பிச்சை , 2004 ம் ஆண்டிலிருந்து கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சென்னையில் பிறந்த இவர், பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் படித்தார். பின்னர் கரக்பூர் ஐஐடியில் பொறியியல் பட்டம் முடித்து, ஸ்டான்ஃபோர்டில் எம்.எஸ் மற்றும் பென்சில்வேனியா வார்டன் கல்லூரியில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றுள்ளார். கூகுள் நிறுவனத்தின் பேர்போன கூகுள் குரோம், கூகுள் டிரைவ் மற்றும் பல முக்கிய கூகுள் ஆப்ஸ்களை உருவாக்கியவர் இவரே.

இத்தகைய பல சாதனைகளைப் படைத்த, திறமை மிக்க தமிழர் ஒருவர் கூகுளின் முதன்மை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளது, நமக்கெல்லாம் பெருமைதானே!
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ