Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாட்ஸ்-அப்பில் ஷேர்லக்!

 ''திங்கள்கிழமை வருகிறேன் என்று ஏமாற்றிவிட்டீர்களே!'' என்று ஷேர்லக்குக்கு வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பினோம். ''ஸோ ஸாரி, வேறு ஒரு இடத்தில் மாட்டிக் கொண்டேன்'' என்றவர், அவர் சொல்ல வேண்டிய செய்திகளை நம் வாட்ஸ்-அப்புக்கு அனுப்பி இருந்தார். இதோ அவர் அனுப்பிய தகவல்கள்...

 

அட்டேன்ஷன் அசோக் லேலாண்ட்!
 
''இந்துஜா நிறுவனத்துக்குச் சேர்ந்த கனரக வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனம் அசோக் லேலாண்ட். இந்த நிறுவனத்தின் ரிசல்ட் நாளை (புதன்கிழமை) வெளியாக இருக்கிறது.வழக்கத்துக்கு மாறாக, நாளை வெளியாக இருக்கும் காலாண்டு ரிசல்ட் நல்லபடியாக இருக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக இருக்கிறது. கடந்த காலாண்டுகளைவிட இந்த முறை லாபம் அதிகரிக்கலாம் என்றும் மார்க்கெட் வட்டாரத்தில் பலரும் எதிர்பார்ப்பதாக தகவல்.
 
 
இதனை ஒட்டி பங்கின் விலை இனி வரும் மாதங்களில் உயர்வதற்கு வாய்ப்பிருப்பதாக பேசிக் கொள்கிறார்கள். அடுத்த சில ஆண்டுகளில் பங்கின் விலை இரண்டு மடங்காக உயரவும் வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள். இதெல்லாம் உறுதி செய்யப்படாத தகவல்கள்தான். நாளை காலாண்டு ரிசல்ட் வந்துவிட்டால், அந்த நிறுவனத்தின் லாபம் என்ன என்பது துல்லியமாக தெரிந்துவிடும். லாபம் அதிகமாக இருந்தால், எதிர்காலத்தில் இந்த பங்கின் விலை உயர்வதற்கு வாய்ப்புண்டு என்று நினைத்து வாங்கலாம். இல்லாவிட்டால், பேசாமல் சும்மா இருந்துவிடுவது நல்லது.''
 
தவிக்கும் செல்போன் நிறுவனம்!
 
சென்னை உட்பட தமிழகம் முழுக்க கலக்கிய செல்போன் நிறுவனம் அது. ஆனால், இப்போது ஆன்லைன் நிறுவனங்கள் தரும் போட்டியினால் அதிர்ந்து போயிருக்கிறதாம். கடந்த ஆண்டில் விற்ற செல்போன்களின் எண்ணிக்கையில் பாதி அளவைத்தான் அந்த நிறுவனத்தினால் இந்த ஆண்டு விற்க முடிகிறதாம். செல்போன் வாங்க வருகிறவர்கள் எல்லாம் செல்போனை நன்றாக நோண்டிப் பார்த்துவிட்டு, பிறகு ஆன்லைனில் வாங்கிவிடுகிறார்களாம். இதனால் ஐபிஓ வரும் தனது கனவைக்கூட இப்போதைக்கு மூட்டை கட்டி வைக்க வேண்டிய கட்டாயம் அந்த நிறுவனத்துக்கு ஏற்பட்டிருக்கிறதாம். 

காலாண்டு முடிவுகள்!
 
டாடா ஸ்டீல்!
 
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் லாபம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 100% அதிகரித்துள்ளது. ஆனால், நிகர விற்பனை குறைந்துள்ளது. கடந்த காலாண்டுபடி இந்த நிறுவனத்தின் மொத்த லாபம் 763 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. 
 
 
அப்போலோ ஹாஸ்பிட்டல்!
 
 
அப்போலோ ஹாஸ்பிட்டல் நிறுவனத்தின் லாபம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 9.8% அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இந்த நிறுவனம் 89.52 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. ஆனால், இந்த ஆண்டு 94.95 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.
 
ரிலையன்ஸ் பவர்!
 
ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் லாபம் 41% உயர்ந்து, 344 கோடி ரூபாயாக உள்ளது. 
 
போஸ்ச்!
 
போஸ்ச் நிறுவனத்தின் நிகர லாபம் 12% உயர்ந்து, ரூ.343.74 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் 306 கோடி ரூபாய் மட்டுமே லாபமாக பெற்றது இந்த நிறுவனம்.
 
குறிப்பு: இனி எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பிவிடுகிறேன். வாசகர்களிடம் கொண்டு போய் சேர்த்துவிடுங்கள்!''
தாங்க்ஸ் ஷேர்லக்!
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ