Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2017ல் அமெரிக்காவை முந்தும் இந்தியா!

 அமெரிக்காவை காட்டிலும் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டில் இந்திய சந்தை அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆன்லைன் வர்த்தகத்தினால் ஸ்மார்ட் ஃபோன் விற்பனை இந்தியாவில் அதிகரித்துள்ளது.

சீனாவின் சந்தை வளர்ச்சி குறைந்து வரும் நிலையில் உலகிலேயே ஸ்மார்ட்ஃபோன்களின் அடுத்த 2வது பெரிய சந்தையாக வரும் 2017க்குள் அமெரிக்காவை முந்தி இந்தியா இடம்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 


2015-16 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஸ்மார்ட்ஃபோன் இறக்குமதி 44% அதிகரித்து 2.65 கோடி ஸ்மார்ட்ஃபோன்கள் விற்பனையாகியுள்ளன. அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பட்டி தொட்டிகளெல்லாம் பரவிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இது மேலும் 19% அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தொடர் வளர்ச்சியின் மூலம் வரும் 2017க்குள் உலகின் 2வது மிகப்பெரிய ஸ்மார்ட்ஃபோன் சந்தையாக விளங்கும் அமெரிக்காவை இந்தியா முந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP