Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தத்கள் விண்ணப்பத்தை ஆர்.பி.ஓவிடம் சமர்பிக்கலாம்

 பாஸ்போர்ட் சேவை கேந்திரங்கள், சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வெளிப்படையாக பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சாதாரணமாக ஒருவர் பாஸ்போர்டுக்கு விண்ணப்பித்து 25 நாட்களுக்குள் போலீஸ்  உட்பட சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகின்றன.  

வரும் 17 ஆகஸ்ட் 2015 அன்று முதல் சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அலுவலகத்தில் தத்கால் படிவங்களை சமர்பிக்கலாம்.  விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனிலேயே சமர்பிக்க வேண்டும். அப்படி சமர்பிக்கப்படும் தத்கல் விண்ணப்பங்கள் ஆன்லைனிலேயே சரிபார்க்கப்படும்.  ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்பித்த பின் எப்போது மண்டல பாஸ்போர்ட் அதிகாரியை சந்திக்க வேண்டும் என்று ஒரு நாள், நேரம் வழங்கப்படும். அந்த அலுவலத்தில் குறிப்பிட்ட ஆவணங்களுடன் சரியான நேரத்திற்கு  வந்து சந்தித்தால் போதும். 
 
தத்கல் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின் தான் தத்களுக்கான கட்டணங்கள் வசூலிக்கப்படும். ஒரு வேளை தத்கள் விண்ணப்பம் ஏற்கப்படவில்லை என்றால், மீண்டும் அவர்கள்   அதே விண்ணப்பத்தை பி.எஸ்.கே சாலிகிராமத்தில் உள்ள அலுவலகத்தில் மதியம் 2 - 4 மணி வரை திங்கட்கிழமை தவிர மற்ற தினங்களில்  சமர்பிக்கலாம்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP