Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இணைய வசதி இல்லாத மக்களுக்கு தனி சேவை

மிழ்நாடு அரசு கேபிள் டிவி காப்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குமரகுருபரன் இ.ஆ.ப ஆன்லன் பாஸ்போர்ட் விண்ணப்பப் படிவம் உருவாக்கும் கவுன்டர்களை தொடங்கி வைத்தார்.
 
இணைய வங்கிச் சேவை மற்றும் க்ரெடிட் கார்ட் போன்ற வசதி இல்லாத மக்கள் இந்த ஆன்லைன் பாஸ்போர்ட் விண்ணப்பப் படிவம் உருவாக்குமிடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு 155 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த கவுன்டரில் பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு செலுத்த வேண்டிய தொகை ஆன்லைன் மூலம் பெறப்படுகிறது. சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அலுவலகத்தில் இந்த சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. இரண்டு கவுன்டர்கள் இந்த சேவைகளுக்குக்காக திறக்கப்பட்டிருக்கின்றன.  
 
இந்த திட்டம் அனைத்து தாலுக்காவிலும் உள்ள மக்கள் சேவை மையத்தில் வரும் செப்டம்பர் 2015க்குள் செயல்படுத்தப்படும் என்று மண்டல பாஸ்போர்ட் அதிகாரி க.பாலமுருகன் தெரிவித்திருக்கிறார்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ