Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நெஸ்லே பங்குகள் விலை 3.59% உயர்வு!

 நாடு முழுவதும் விற்பனைக்கு தடைசெய்யப்பட்டிருந்த பிரபல நெஸ்லே மேகி நூடுல்ஸ்க்கு போடப்பட்ட தடையை விலக்க முன்வந்துள்ளது மும்பை உயர் நீதிமன்றம். இதனால் பங்குச் சந்தையில் அதன் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.


நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் காரீயம் சேர்க்கப்பட்டிருந்ததால், கடந்த ஜூன் மாதம் முதல் நாடு முழுவதும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. அதனை அடுத்து மேகியின் மாதிரிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. பெரும்பாலான

சோதனைகளில் நெஸ்லேவுக்கு எதிராகவே முடிவுகள் வந்தன. மத்திய அரசும் நெஸ்லே நிறுவனத்திடம் ரூ.640 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனு போட்டிருந்தது. 
இந்த நிலையில் இன்று இது குறித்த வழக்கில், மும்பை உயர் நீதிமன்றம் மேகி நூடுல்ஸின் சோதனை முடிவுகள் வரும் ஆறு வாரத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், அதில் அனுமதிக்கப்பட்ட அளவில் காரீயம் இருந்தால், நெஸ்லே நிறுவனம் தனது மேகி நூடுல்ஸ் உற்பத்தியையும் விற்பனையையும் தொடரலாம் என்று தீர்ப்பளித்துள்ளது. 


இந்தத் தீர்ப்பையடுத்து சந்தையில் நெஸ்லேவின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. பங்குச் சந்தையில், ஜூன் மாதத்திற்கு முன் வரை ரூ. 7,000-க்கும் மேல் வர்த்தகமாகி வந்த நெஸ்லேவின் பங்குகள் ஜூன் மாதத்தில் மேகிக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு விலை 6,000-க்கும் கீழ் குறைந்தது.


இன்று நெஸ்லேவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ள காரணத்தால், நேற்று ரூ.6,184க்கு வர்த்தகமாகியிருந்த அதன் பங்குகள் இன்று காலை 3.59% அதிகரித்து 6,407 ரூபாயாக வர்த்தமாகிக் கொண்டிருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP