Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொடர் சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை

 சீன பண மதிப்பு குறைக்கப்பட்டது மற்றும் ஜிஎஸ்டி மசோதா அமலாக்கம் தாமதமாவது உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

ஐடி, ஹெல்த்கேர் மற்றும் நுகர்வோர் பொருட்கள் ஆகிய துறைகள் உயர்ந்து வர்த்தகமான நிலையிலும், எப்எம்சிஜி, ஆட்டோ, மெட்டல், வங்கி, ரியால்டி போன்ற துறைகள் சரிந்து வர்த்தகமானதால், பங்குச் சந்தை குறியீட்டில் சரிவை சந்திக்க நேர்ந்தது. 

இது குறித்து எஸ்.பி.ஐ வங்கியின் தலைவரான அருந்ததி பட்டாச்சார்யா கூறுகையில் "யுவான் மதிப்பு சரிவது சவால்தான் இந்தியச் சந்தை சறுக்கிறது என்பதை மறுக்க முடியாது. இதுபோன்ற சவால்களை நாம் பலமுறை சந்தித்திருக்கிறோம். அதனால் இது நிரந்தரமல்ல. இதிலிருந்து நாம் மீண்டு வர முடியும்" என்று தெரிவித்துள்ளார்.
 
தற்போது சென்செக்ஸ் 27705 (+185) புள்ளிகளாகவும் நிஃப்டி 8404 (+55) புள்ளிகளாகவும் வர்த்தகம் ஆகிறது! 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close