Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவில் வெளியேறிய மியூச்சுவல் ஃபண்டுகள்

 பங்குச் சந்தையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் வெளியேறிய தொகை கடந்த நான்கு மாதங்களில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்திருக்கிறது. 

பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் இந்திய முதலீட்டாளர்களின் ஆர்வம் இப்போதுதான் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 7,800 கோடி ரூபாய் பரஸ்பர நிதி பங்குச் சந்தையிலிருந்து வெளியேறி இருக்கின்றன. 
 
பங்குச் சந்தை குறியீடுகள் கடந்த மாதம் முழுவதும் நிலையற்ற தன்மையில் இருந்த போதும், மிதமான வளர்ச்சியிலேயே சந்தை இருந்து வந்தது. ஜூலை 31ஆம் தேதி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ், 1.2% அதிகரித்து 28,114 ஆக வர்த்தகமானது. 
 
ஆனாலும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் அதிகளவில் வெளியேறியுள்ளனர். இதனால் கடந்த ஜூன் மாதம் 10,325 கோடி ரூபாயாக இருந்த மியூச்சுவல் ஃபண்டுகளின் முதலீடு, ஜூலை மாதத்தில் அப்படியே பாதியாகக் குறைந்து, 5,534 கோடி ரூபாயாக ஆனது. 
 
ஆனால் அதே ஜூலை மாதத்தில் பங்குச் சந்தையிலிருந்து வெளியேறிய மியூச்சுவல் பண்டுகளின் முதலீடு மட்டும் 7,794 கோடி ரூபாய். 
 
இதற்கு காரணம், "போனஸ் மற்றும் டிவிடென்ட் கொடுத்து வந்த ஈக்விட்டி ஃபண்டுகளின் பங்குகள் விலை குறைந்ததால், அந்த நிறுவனத்தினர் முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை வெளியே எடுத்துக்கொள்ள அனுமதித்தனர். மேலும் மிட் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்களில் முதலீடு செய்யும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகளில் இருந்து வெளியேறிய தொகையும் அதிகரித்துள்ளது" என்று நிதி நிறுவனங்களின் மேலாளர்கள் தெரிவிக்கின்றனர். 
 
ஆனால், இந்த நிலை மாறும் வாய்ப்புள்ளதாகவும், மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் முதலிடு செய்பவர்கள் அதிகரிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ