Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நேற்று ஜியோமி இன்று போஸ்கோ: மேக் இன் இந்தியா மூவ்!

 ஆந்திர மாநில மகாராஷ்டிராவில் நேற்று, ஃபாக்ஸ்கான் மற்றும் ஜியோமி நிறுவனங்கள் இணைந்து மொபைல் உற்பத்தி செய்யும் ஆலையைத் தொடங்கிய நிலையில், இன்று போஸ்கோ எனும் உருக்கு நிறுவனம் தனது ஆலையை அங்கு நிறுவும் திட்டத்தை அறிவித்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த ஆலைகள் தொடங்கப்படுகின்றன.

 

ஜியோமி மொபைல் நிறுவனம், தைவானின் முன்னணி மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான் நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் உற்பத்தி ஆலையைத் தொடங்க உள்ளது. 

இந்திய சந்தையில் சென்ற ஆண்டு முதல் செயல்பட்டுவரும் ஜியோமி, தற்போது சீனா மற்றும் பிரேசிலில் மட்டுமே தனது உற்பத்தியை செய்து வருகிறது. இனி இந்தியாவிலும் உற்பத்தியாகும் என்று தெரிவித்துள்ளது. இதுவரை இந்நிறுவனம் 30 லட்சம் செல்போன்களை விற்பனை செய்துள்ளது. 

போஸ்கோ:

தென் கொரியாவைச் சேர்ந்த போஸ்கோ எனும் உருக்கு நிறுவனம் மஹாராஷ்டிராவில் ஆலை தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக உத்தம் உருக்கு மற்றும் மின்சார நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துள்ளது.
மொத்தம் 100 கோடி டாலர் முதலீட்டில் இந்தத் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆலையிலிருந்து ஆண்டுக்கு 30 லட்சம் டன் உருக்கு உற்பத்தி செய்யப்பட இருப்பதால் இந்திய உருக்கு தேவையில் பெருமளவு நிறைவேறும்.
உலகின் முன்னணி உருக்கு உற்பத்தியாளரான மிட்டல் நிறுவனத்தோடு, உத்தம் கால்வா ஸ்டீல் நிறுவனம் இணைந்து உத்தம் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனத்தை செயல்படுத்தி வருகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ