Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்ஃபோசிஸ்: பங்கு விலை 21% உயர்வு

 உலகின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகளின் விலை தொடர்ந்து அதிகரித்து 1,158 ரூபாயாக வர்த்தகமாகியது.

 

 தேசிய பங்குச் சந்தையில் கடந்த இரண்டு வர்த்தக நாட்களில், இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகள் 5.3% வரை அதிகரித்து வர்த்தகமாகியுள்ளது.
 
 

ஜூலை மாதத்தில் ரூ.950க்கு வர்த்தமாகிக்கொண்டிருந்த இதன் பங்குகளின் விலை, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 21% அதிகரித்து இன்று வர்த்தக முடிவில் 1,158 ரூபாயாக வர்த்தகமானது. 

 

சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்த நிதி ஆண்டின் முதலாம் காலாண்டு முடிவுகள் இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு சாதகமாக வந்ததே இந்த ஏற்றத்துக்கு முக்கிய காரணம் என்கிறார்கள் சந்தை அனலிஸ்ட்டுகள்!
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ