Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாடா மோட்டார்ஸ் பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் கிடையாது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 70ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் டாடா குழுமத்தின் சேர்மேன் சிப்ரஸ் மிஸ்ட்ரி " இந்த ஆண்டு பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் தொகை வழங்க இயலாது என்பதை தெரிவித்திருக்கிறார். 
 
இந்த 13 ஆண்டுகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிவிடெண்ட் கொடுக்காமல் இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கைக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.
 
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்திலிருந்து கிடைக்கும் டிவிடெண்ட் தொகை தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முக்கிய வருவாயாக இருக்கிறது. மேலும் அதிகப்படியாக டிவிடெண்ட் தொகை வழங்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் சிப்ரஸ் மிஸ்ட்ரி. 
 
இதற்கு மாறாக, ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தன் பெரிய சந்தையான சீனா, ரஷ்யா மற்றும் லத்தின் அமெரிக்காவில் கடுமையான சூழல்களையும், போட்டிகளையும் சமாளித்து வருகிறது.  சமீபத்தில் தான் ஜாகுவார் நிறுவனத்தின் அசெம்பிளி பிரிவு சீனாவில் தொடங்கப்பட்டது. தற்போது சீனாவின் கரென்சியான யூவானின் மதிப்பு சரிந்துள்ளதால், ஜாகுவார் நிறுவனத்தின் இறக்குமதி பாதிப்படைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ