Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அசோக் லே லாண்ட் விரிவாக்கத் திட்டம்

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய வணிக வாகன உற்பத்தியாளரான அசோக் லே லாண்ட் 3 - 5 ஒருங்கிணைக்கும் ஆலைகளை (Assembling centre) இந்தியாவிற்கு வெளியில் நிர்ணயிக்க திட்டமிட்டு வருகிறது. முதல் ஆலை இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் நிறுவப்படும் என்றும், அதற்கு 30 - 50 கோடி ரூபாய் வரை முதலீடு தேவைப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார் அசோக் லே லாண்ட் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி கோபால் மஹாதேவன். 
 
இந்தியாவிற்கு வெளியில் அமைக்கப்பட இருக்கும் ஆலைகளில் முதலில் சிறிய ரக வணிக வாகனங்களை மட்டும் ஒருங்கிணைக்கும். பின் தேவைக்கு ஏற்ப சிறிது சிறிதாக கன ரக வாகனங்களையும் ஒருங்கிணைக்கும் பணி தொடங்கப்படும் என்று கூறினார். 
 
அடுத்த 3 - 5 ஆண்டுகளுக்குள், இந்த நிறுவனத்தின் வருவாயில் மூன்றில் ஒருபங்கு (1/3) பங்கு ஏற்றுமதியிலிருந்து வர வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயித்திருக்கிறது. தற்போது ஏற்றுமதி மூலம் 15 சதவிகிதம் வருமானம் வருவதாக கூறினார் மஹாதேவன்.
 
இன்றைய தேதிக்கு சார்க் நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நன்றாக காலூன்றி இருப்பதாகவும், ஆஃப்ரிக்கா மற்றும் தென் அமேரிக்க நாடுகளில் தங்களுக்கு பெரிய வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறி இருக்கிறார் கோபால் மஹாதேவன்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close