Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாட்கோவிற்கு எஃப்.டி.ஐ அளவு அதிகரிக்க அனுமதி

 

நாட்கோ பார்மா லிமிடெட் நிறுவனத்திற்கு, அந்நிய நேரடி முதலீட்டை 24 சதவிகிதத்திலிருந்து 31.5 சதவிகிதமாக உயர்த்திக் கொள்ள வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (Foreign Investment Promotion Board - FIPB) அனுமதி அளித்திருக்கிறது.

பங்குகளை தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கும் மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்திருக்கிறது. நாட்கோ ஒதுக்கீடு செய்ய இருக்கும் பங்குகளின் மதிப்பு 450 கோடி ரூபாய் வரை இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த அறிவிப்பு வெளியான பின்பும் நாட்கோ நிறுவனம் பங்குகள் சுமாராக 5 சதவிகிதம் இறக்கம் கண்டே வர்த்தகமானது என்பது குறிப்பிடத்தக்கது. நாளைய வர்த்தகத்திலாவது ஏற்றம் காணுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ