Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காலாண்டு முடிவுகள் : அசோக் லே லாண்ட், டாடா பவர்ஸ்

அசோக் லே லாண்ட் :

வணிக வாகனங்களை தயாரிக்கும் நிறுவனமான அசோக் லே லாண்டின் 2015 - 16 நிதி ஆண்டிற்கான நிகர லாபம் 159 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டின்  முதல் காலாண்டில்  48 கோடி ரூபாய் நஷ்டத்தை காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த காலாண்டில் 14,706 ட்ரக்குகளையும், 3,894 பஸ்களையும் விற்பனை செய்திருக்கிறது. மிதரக மற்றும் கனரக வாகனங்களின் விற்பனை வளர்ச்சி 45 சதவிகிதமாக இருக்கிறது. 
 
டாடா பவர்ஸ் :
 
டாடா பவர்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 241.3 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் 111.30 கோடி ரூபாய் நஷ்டத்தை காட்டிய நிறுவனம் தற்போது லாபம் சம்பாதித்திருக்கிறது. 
 
நல்ல செயல்பாடு, நிலக்கரியின் விலை குறைவால் கோஸ்டல் குஜராத் பவர்ஸ் நிறுவனம்  கூடுதலாக மின்சாரத்தை உருவாக்குவது போன்றவைகளால் இந்த அளவிற்கு லாபம் ஈட்டுவதாக கூறப்படுகிறது.  அது மட்டும் இல்லாமல் மின்சாரத்திற்கு கொடுக்கப்படும் விலை அதிகரிப்பு, மின்சாரத்தை உருவாக்க பயன்ன்படுத்தப்படும் எரிபொருளின் விலை குறைவு போன்றவைகளும் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் அதிகரிக்க முக்கிய காரனங்களாக கருதப்படுகின்றன. 
 
செயல்பாட்டு லாபம் கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தை காட்டிலும் 31 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. அதே போல் செயல்பாட்டு லாப வரம்பு 23.6 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ