Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காலாண்டு முடிவுகள் - ஓஎன்ஜிசி, டிஎல்எஃப்

 ஓஎன்ஜிசி :

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் நிகர லாபம் 14% அதிகரித்து 5,459 கோடி ரூபாயாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தி 1.3 சதவிகிதமும், இயற்கை எரிவாயு 3.6 சதவிகிதமும் அதிகரித்திருக்கிறது. 
 
இந்த நிறுவனம் நான்கு புதிய இடங்களில் எண்ணெய் இருப்புக்கள் இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறது.  கொஜாலியா, கொமராடா, காவிரி கோதாவரி பகுதிகளில் கூடுதலாக இரண்டு இடங்களையும் கண்டு பிடித்திருக்கிறது. இந்த நான்கு இடங்களிலும் உள்ள எண்ணெய் வளங்களை வெளியில் எடுக்க நிறுவனத்தின்ன் இயக்குநர் குழு 2,818 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கிறது. 
 
 
டிஎல்எஃப் :
 
இந்தியாவின் மிகப்பெரிய பட்டியலிடப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஎல்எஃப்-ன் முதல் காலாண்டின் நிகர லாபம் 5 சதவிகிதம் குறைந்திருக்கிறது. 
 
2015 - 16 நிதி ஆண்டிற்கான முதல் காலாண்டில் 1.22 பில்லியன் டாலர் நிகர லாபமாக காட்டி இருக்கிறது. ஆனால் கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் 1.28 பில்லியன் டாலர் நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ