Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் தங்கத்திற்கான தேவை 25% சரிவு

2015 - 16 நிதி ஆண்டிற்கான முதல் காலாண்டில் இந்தியா 154.5 டன் தங்கத்தை மட்டுமே இறக்குமதி செய்து இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் 204.9 டன் தங்கம் வாங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது 25 சதவிகித சரிவாகும். 
 
டாலர் கணக்குப்படி பார்த்தால் இது 30 சதவிகித சரிவு. இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 5,992.1 மில்லியன் டாலருக்கு மட்டுமே தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. இதே கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 8,488.9 மில்லியன் டாலர் அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.
 
இந்தியாவில் வாங்கப்படும் தங்கத்தில் சரிபாதிக்கு மேல் வாங்கப்படுவது கிராமபுற மக்கள் தான் என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்திருக்கிறது. தற்போது இந்தியாவில் நிலவும் கரடுமுரடான நிலையில்லாத வானிலை காரணமாக கிராம புற மக்களிடம் பணப் புழக்கம் குறைந்திருப்பதும் தங்க இறக்குமதி குறைவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ