Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூபாய் வீழ்ச்சி-தங்கம் விலை உயர்வு..!

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்ததால் தங்கத்தின் விலை அதிகரித்து வர்த்தமாகிறது. இதனால் தங்கத்தின் மீது முதலீடு செய்வோர் பின்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


சீனா தனது யுவான் மதிப்பைக் குறைத்ததால் டாலரின் மதிப்பு உயர்ந்தது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் விழ்ச்சியடைந்து, தற்போது டாலருக்கு நிகராக 65.15 ரூபாயாக உள்ளது. ரூபாய் மதிப்பு கடும் விழ்ச்சியடைந்ததால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.25,000 லிருந்து ரூ. 26,000 ஆக உயர்ந்தது. இன்றைய நிலவரப்படி 25,855 ரூபாயாக உள்ளது.


இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்தாலும் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்காமல் பின்வாங்கும் வாய்ப்புள்ளது. 


2015-16 நிதி ஆண்டிற்கான முதல் காலாண்டில் இந்தியா 154.5 டன் தங்கத்தை இறக்குமதி செய்தது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் 204.9 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 25% தங்கத்தின் இறக்குமதி சரிவடைந்திருக்கிறது.


 இந்தியச் சந்தையில் தங்கத்தின் மீதான மோகம் இப்போதைக்கு குறையும் சூழல் உருவாகியுள்ளதால், வரும் காலாண்டிலும் தங்கத்தின் தேவை குறைந்து இறக்குமதி மேலும் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ