Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கடன் ஃபண்டுகளின் ரிஸ்க்!

 - த.ராஜன், இயக்குனர்

ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்ஸ்
 
அதிகம் ரிஸ்க் எடுக்க முடியாதவர்கள் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஆனால் அதிலும்  சில ரிஸ்க்குகள் உள்ளன. 
 
அது என்னென்ன ரிஸ்க் என்பதை பார்ப்போம்.
 
கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் போது வங்கி ஃபிக்ஸ்ட் டெபாசிட்டை விட கூடுதலாக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த வருமானம் சில நேரங்களில் குறையவும் வாய்ப்புள்ளது.
 
கிரெடிட் ரிஸ்க்:
 
கடன் சார்ந்த மியூச்சுவல் திட்டங்களில் முதலீடு செய்யப்படும் தொகை நிறுவனங்களின் கடன் பத்திரங்கள், வைப்புத் தொகை ஆகியவற்றில் முதலீடுச் செய்யப்படும். இப்படி முதலீடு செய்யப்படும் நிறுவனங்கள் ஏதாவது காரணத்தினால் மூடப்படும் போது முதலீட்டை திரும்ப பெறுவது கடினம்.  இதுவே கிரெடிட் ரிஸ்க் எனப்படும்.

 

வட்டி விகித ரிஸ்க்:
 
வட்டி விகித ரிஸ்க் என்பது நம் முதலீட்டில் வரும் வருமானத்தில் ஏற்படும் மாற்றங்களைக் குறிப்பதாகும். ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கும் வருமானம் குறையும். அதுவே வட்டி விகிதத்தை குறைக்கும் போது வருமானம் அதிகரிக்கும். இதுவே வட்டி விகிதம் ரிஸ்க் எனப்படும்.
 
லிக்விடிட்டி ரிஸ்க்:
 
முதலீட்டாளர்கள் எதாவது ஒரு காரணத்தினால் அதிக அளவிலான முதலீட்டை விற்கும் போது பணம் கிடைக்க ஓரிரு நாட்கள் காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த 2008ம் ஆண்டு லீமென் பிரதர்ஸ் நிறுவனம் திவாலான சமயத்தில் இந்தியா பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தை பாதிப்புக்குள்ளானது. அச்சமயத்தில் முதலீட்டாளார்கள் ஒட்டுமொத்தமாக முதலீட்டை திரும்பப் பெற விழைந்ததால் ஓரிரு நாட்கள் கால தாமதமாக பத்திரங்களை விற்று முதலீட்டாளர்களுக்கு செலுத்தினர்.

 

எவ்வாறு தவிர்க்கலாம்:
 
கிரெடிட் ரிஸ்க்:
 
கடன் ஃபண்டுகளின் முதலீடு எந்த வகையான பாண்டுகளில் உள்ளது என்பதை கவனிக்க வேண்டும். முதலீடு செய்யப்படும் பாண்டுகளுக்கு ரேட்டிங் இருக்கும். இந்த ரேட்டிங் அடிப்படையாக வைத்து முதலீட்டை மேற்கொள்வது நல்லது.  அதாவது "AAA", "AA", "AA+", "AA-", "A+", "A-" ரேட்டிங் இருக்கும். இதில் "AAA", "AA" ரேட்டிங் உள்ள பாண்டுகளில் முதலீடு செய்வது நல்லது.

 

வட்டி விகித ரிஸ்க்.
 
வட்டி வருமானத்தின் மீதான பாதுகாப்பின்மையை நம்மால் முழுவதுமாக தவிர்க்க முடியாவிட்டாலும் குறைக்க முடியும்.
 
ரிசர்வ் வங்கி மற்றும் அரசு வெளியிடும் பத்திரங்களில் முதலீடு செய்யும் கடன் சார்ந்த மியூச்சுவல் பண்ட்களை (GILT FUNDS) தவிர்ப்பதன் மூலம் வட்டி விகித ரிஸ்க்கை குறைக்க முடியும்.
 
பல்வேறு முதிர்வுக் காலம் உள்ள வெவ்வேறு முதலீட்டு கலவைக் கொண்ட திட்டங்களில் முதலீடுச் செய்வதன் மூலம் வட்டி விகித ரிஸ்கைத் தவிர்க்கலாம்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ